எழுத்தாள இயக்குனரின் எதார்த்த கதை!



அடித்தட்டு மக்களின் வாழ்வியலையும் அவர்கள் சார்ந்த அரசியலையும் அழகாகச் சொன்ன படம் ‘மெட்ராஸ்’. அந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த கலையரசன் நாயகனாக நடிக்கும் படம் ‘மைலாஞ்சி’. பத்திரிகையாளர், எழுத்தாளர், குணச்சித்திர நடிகர் என பல திறன்கள் கொண்ட அஜயன்பாலா இயக்கும் படம் இது. இயக்குனர் விஜய், அஜயன்பாலாவுடன் இணைந்து திரைக்கதை அமைத்துள்ளார்.

எழுத்தாளர் வேலா ராமமூர்த்தி, மதுரை முத்து, ஈஸ்வரிராவ், கிஷோர் முக்கிய பாத்திரங்களில் நடிக்கிறார்கள். அஜயன் பாலா மீதுள்ள நம்பிக்கையில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு தங்கர்பச்சான் ஒளிப்பதிவு செய்ய முன்வந்துள்ளார். நா.முத்துக்குமாரின் பாடல்களில் உருவாகும் இந்தப் படத்துக்கு நடிக்கத்தெரிந்த அழகான நாயகியைத் தேடிவருகிறார்கள்.