நாடக வாழ்வியலை மையமாக வைத்து வசந்தபாலன் இயக்கும் படம் ‘காவியத் தலைவன்’. சித்தார்த், பிருத்விராஜ் என்கிற இரண்டு நாடகக் கலைஞர்களின் வாழ்வில் நடக்கும் போட்டியும் போராட்டமும்தான் கதை.“எழுத்தாளர் ஜெயமோகன் எனக்கு அவ்வை சண்முகம் எழுதிய ‘எனது நாடக வாழ்க்கை’ நூலைக் கொடுத்தார். அதைப் படித்தபிறகுதான் இப்படியொரு பின்னணியில் படம் இயக்கவேண்டும் என்கிற எண்ணம் உருவானது” என்கிறார் இயக்குனர் வசந்தபாலன்.

சித்தார்த் மற்றும் பிருத்விராஜின் நாடக குருவாகவும், வாத்தியாராகவும் நாசர் நடித்துள்ளார். இந்தப்படத்தில் இடம் பெறும் வேதிகாவின் கதாபாத்திரத்துக்கு கே.பி.சுந்தராம்பாளின் பாவனைகள் உதவியாக இருந்த தாம். ஏ.ஆர். ரஹ்மான் இசை யமைத்துள்ள இந்தப் படம் மலையாளத்தில் ‘பிரதிநாயகன்’ என்ற பெயரில் வெளியாக உள்ளது.