காற்றில் நடக்கும் கண்ணதாசன்!



ராதாபாரதி இயக்கிய ‘காற்றுள்ளவரை’ படத்தில் பாடலாசிரியராக அறிமுகமான கவி பாஸ்கர் இப்போது 15 படங்களுக்கு பாடல்கள் எழுதுகிறார். கடந்த இரண்டு ஆண்டுகளில் ஈழம் குறித்து இவர் எழுதிய நூற்றுக்கும் மேற்பட்ட பாடல்கள் குறுந்தகடுகளாக வந்திருக்கின்றன.

இகோர் இயக்கிய ‘தேன்கூடு’ படத்தில் இவர் எழுதிய அத்தனை பாடல்களும் புலம் பெயர்ந்து வாழும் தமிழர்களின் பாராட்டைப் பெற்றவை. இயக்குனர் பாரதிராஜாவைப் பற்றி எடுக்கப்பட்ட ஆவணப் படத்தில் கவிதை வடிவில் இவரது குரல் பளிச்சிடுவதை முன்னணி இயக்குனர்கள் பலரும் பாராட்டியுள்ளனர். 13 நூல்களை எழுதியுள்ள இவரது ‘காற்றில் நடந்துவருகிறார் கண்ணதாசன்’ நூல் விரைவில் வெளிவர உள்ளது.

பேயே நீயே துணை!

குறைந்த பட்ஜெட்டில் படம் இயக்கி, முதலுக்கு மோசம் வராதவகையில் லாபம் பார்த்துக் கொடுக்கும் இயக்குனர்கள் அடுத்தடுத்து படவாய்ப்பை பெறுகிறார்கள். அவர்களில் முக்கியமானவர் ஆனைவாரி ஸ்ரீதர். ‘வேடப்பன்’, ‘ஒரு சந்திப் பில்’, ‘சோக்கு சுந்தரம்’ படங்களைத் தொடர்ந்து அடுத்த படத்துக்கான வேலைகளைத் தொடங்கிவிட்டார் இவர். பேய்க் கதைகள் வெற்றி பெறுவதால், பேயை மையப்படுத்தி படம் இயக்க உள்ளாராம்.