அலட்டிக் கொள்ளாத ஸ்ருதி!



ஹிட் படங்களில் நடிக்கவேண்டும் என்கிற ஆசை எல்லாம் ஸ்ருதிஹாச னுக்கு இல்லையாம். ‘ஒரு கதையைத் தேர்ந்தெடுத்து நடிக்க ஆரம்பித்த பிறகு எதற்கும் கவலைப்படக்கூடாது. அந்தப்படம் வெற்றி பெற்றாலும் தோல்வியடைந்தாலும் அடுத்த படத்தைத் தேடி போய்க்கிட்டே இருக்கணும்’ என்கிறார் அம்மணி.

தயாரிப்பாளர் வருண் மணியனுக்கும் தனக்கும் நிச்சயதார்த்தம் நடந்ததாக வெளியான செய்தி உண்மையல்ல என்கிறார் திரிஷா. ‘அப்படியொரு நிகழ்வு நடந்தால், அதை அறிவிக்கும் முதல் ஆளாக நான்தான் இருப்பேன்’ என்று சொல்லும் திரிஷா, இந்த வதந்தியைக்  கிளப்பிவிட்டது யாரென்று கண்டுபிடிக்கும் வேலையில் தீவிரமாக இருக்கிறார்.