‘காஸ்மோரா’வில் இன்னொரு நாயகி!



‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’, ‘ஜீவா’, ‘வெள்ளக்கார துரை’ படங்களில் ஹீரோயினாக நடித்துள்ள ஸ்ரீதிவ்யாவின் கைவசம் ‘காக்கி சட்டை’, ‘பென்சில்’ படங்கள் இருக்கின்றன. அடுத்து கார்த்தி ஜோடியாக ‘காஸ்மோரா’ படத்தில் நடிக்கிறார்.

இதில் நயன்தாரா மெயின் ஹீரோயின். ஸ்ரீதிவ்யாவைப் பற்றிய கூடுதல் தகவல். 2000ல் மலையாள ‘தென்காசிப்பட்டணம்’ படத்தை தெலுங்கில் ஜெயம் ராஜா ரீமேக் செய்து இயக்கிய போது, அதில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான ஸ்ரீதிவ்யா, தொடர்ந்து சில படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தார். பிறகு 2010ல் ஹீரோயினாக நடிக்கத் தொடங்கினார்.