ஆந்திரா ஆவக்காய்




Vannathirai magazine, Vannathirai weekly magazine, Tamil Magazine Vannathirai, Tamil magazine, Tamil weekly magazine, Weekly magazine

    அல்லரி நரேஷின் அடுத்த படத்தில் ஸ்ரேயா ஜோடியாக நடிக்கிறார்.

ஷர்வானந்தின் ‘அந்தாரி பந்துவய்யா’ தமிழில் டப்பிங் ஆகிறது.

‘கோ’ படம் தமிழைப் போலவே தெலுங்கிலும் ‘ரங்கம்’ என்ற பெயரில் நூறு நாட்களை நெருங்கி வருகிறது.

தெலுங்கு மற்றும் மலையாள நடிகை சாரதாவின் கேரக்டரில் பத்மப்ரியா, ‘நாயகி’ படத்தில் நடிக்கிறார்.

இளம் நாயகன் சாய்ராம் சங்கரின் அடுத்த படத்தில் பார்வதி மெல்டன் ஜோடி சேர்கிறார்.

வாரிசு சைதன்யாவின் ‘தடா’ பட ரிலீஸுக்காக தனது ‘ராஜண்ணா’வை தள்ளிப் போட்டுள்ளார் நாகார்ஜுனா.

ஆந்திரா அமைப்புகளின் ஓயாத டார்ச்சரால் ‘பெங்வாடா ரவடிலு’ தலைப் பில் ரவுடியை நீக்கியுள்ளார் ராம்கோபால் வர்மா.

‘முக்குரு’, ‘துஷ்ஷனா’ பட நாயகியான சஞ்சனா மலையாளத்தில் மம்முட்டி ஜோடியாக நடிக்கிறார்.

பிரபு தேவா நடித்துள்ள ‘உருமி’ பட தெலுங்கு ஆடி யோவை ஜெனிலியா வெளியிட்டுள்ளார்.

வருண்சந்தோஷின் ‘பிரம்மகாடி கதா’வை ஒரு தடவை  ப£ர்க்கலாம் என மீடியாக்கள் விமர்சித்துள்ளன.

இரண்டாவது தடவையாக புது முகங்கள் சகிதமாக அடுத்த படத்தை அறிவித்துள்ளார் இயக்குநர் தேஜா.
கிரி