இயக்குனருக்கு இசையமைப்பாளர் கொடுத்த டார்ச்சர்
Vannathirai magazine, Vannathirai weekly magazine, Tamil Magazine Vannathirai, Tamil magazine, Tamil weekly magazine, Weekly magazine

     ‘‘சோதனை மேல் சோதனை போதுமடா சாமி’’ என்று பாடியவாறே நம் முன் வந்தமர்ந்தார் சரோஜா. ‘‘யாருக்குச் சோதனை?’’ என்று நாம் கேட்டதும் ‘சும்மா ஒரு பாட்டை முணுமுணுத்தால் கூட அதற்கு அர்த்தம் கேட்கிறீரே’ என்று சலித்துக் கொண்டாலும் காரணத்தோடுதான் பாடியிருக்கிறார் என்பது அவர் சொன்ன செய்தியைக் கேட்டபோது தெரிந்தது.‘புதுசாகப் பாதை போட்ட இயக்குநர், நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஒரு படத்தை இயக்கினார். அந்தப்படம் ஆண்டுக்கணக்கில் இழுத்துக் கொண்டேயிருக்கிறது. தயாரிப்பாளருக்கும் இயக்குநருக்கும் கருத்து வேறுபாடு மற்றும் தயாரிப்பாளரின் பொருளாதாரச் சிக்கல் ஆகியனவற்றால் அந்த வித்தைப்படம் தாமதமாகிக் கொண்டேயிருந்ததாம்.

இயக்குநரும் வேறுபடத்தைத் தொடங்கும் வாய்ப்பு எதுவும் இல்லாததால் இந்தப்படத்தை முடித்துவெளியிட கடும் முயற்சிகளை மேற்கொண்டிருந் தாராம். ஒருவழியாக அவருடைய முயற்சிக்குப் பலன் கிடைத்ததாம். தயாரிப்பாளர் கூப்பிட்டு மீதிப்படத்தையும் முடியுங்கள் என்று சொன்னாராம். உடனே உற்சாகமாகக் கிளம்பி பாக்கியிருந்த படப்பிடிப்பை முடித்துக்கொண்டு வந்து இசையமைப்பாளரிடம் படத்தைக் கொண்டுபோய்க் கொடுத்தால் அவர் செய்யும் கொடுமையைக் கண்டு மனம் குமுறிக் கொண்டிருக்கிறாராம் இயக்குநர்’’ என்று சொன்ன சரோஜாவிடம், ‘யார் அந்த இசையமைப்பாளர்? அவர் என்ன தப்பு செய்தார்?’’ என்று நாம் கேட்டோம்.

 ‘‘காதலான படத்தில் அறிமுகமான அந்த இசையமைப்பாளருக்கு முதல்படம் தவிர வேறு எதுவுமே சரியாக அமையவில்லை. அதற்குக் காரணம் அவருடைய நடவடிக்கைள்தாம் என்பதைப் பலரும் சொல்லியிருக்கிறார்கள். இந்தப்படத்திலும் பின்னணி இசைச் சேர்ப்புக்காக அவருடைய மேசைக்குப் படம் போய் பல வாரங்கள் ஆகியும் அவர் இசைக்கிற பாட்டைக் காணோமாம். நானே பல போராட்டங்களுக்குப் பிறகு இவ்வளவு தூரம் படத்தை எடுத்து வந்திருக்கிறேன் நீங்களும் ஏன் சோதிக்கிறீர்கள்?’’ என்றெல்லாம் இயக்குநர் கேட்டும் அவர் சரியாகாத காரணத்தால் அதிரடியாக அவரை மாற்றிவிட்டு வேறொருவரை வைத்து பின்னணிஇசை சேர்க்கும் முடிவுக்கு வந்தாராம் இயக்குநர்.

வேறொருவரை வைத்தால் அவருக்குத் தனியாகச் சம்பளம் தரவேண்டும் என்கிற சிக்கல் காரணமாக அவரையே கன்வின்ஸ் செய்து இசையமைக்க வைத்தார்களாம் தயாரிப்புத் தரப்பினர். இருந்தாலும் இந்த இசையமைப்பாளர் மேல் கடும் வெறுப்பில் இருக்கிறாராம் இயக்குநர். இவ்வளவு சிக்கல்களுக்கு நடுவில் படம் தயாராகிக் கொண்டிருப்பதுதான் சம்பந்தப்பட்டவர்களுக்கு ஆறுதலான செய்தி’’ என்று சொல்லி முடித்தார் சரோஜா.