முதலிரவுக்கு தடை போட்ட நாயகி
Vannathirai magazine, Vannathirai weekly magazine, Tamil Magazine Vannathirai, Tamil magazine, Tamil weekly magazine, Weekly magazine

            தெலுங்கில் ‘ப்ளீஸ் சாரி தேங்ஸ்’ என்ற பெயரில் வெளிவந்து வெற்றி பெற்ற படத்தை தமிழில் ‘மதனா மன்மதனா’ என்ற பெயரில் கோகுல் ஆர்ட்ஸ் வெளியீடுகிறது.
ஆதீத்யா, வந்தனா, ப்ரியா நடித்துள்ள இந்தப் படத்தை ஸ்ரீநிவாஸ் இயக்கி யுள்ளார். சமீபத்தில் வெளியான ‘தாரம்’ படத்துக்கு பாடல்கள், வசனம் எழுதிய ஆர்.பி.பாலாதான் இந்தப் படத்துக்கும் பாடல்கள், வசனம் எழுதியுள்ளார்.

அவரிடம் படத்தைப் பற்றி கேட்டோம். ‘‘கதையின் நாயகன் பெரிய நிறுவனத்தின் அதிகாரி. அதே அலுவலகத்தில் பணிபுரியும் ஒரு பெண் தன் காதலை நாயகனிடம் தெரிவிக்கிறாள். ஆனால் நாயகன் அவளுடைய காதலை நிராகரித்து விட்டு வேறு ஒரு பெண்ணை காதலித்து மணமுடிக்கிறான். தனக்கு கிடைக்காத நாயகனின் நிம்மதியை கெடுக்க வேண்டும் என்று எண்ணும் முதல் காதலி நாயகன் முதலிரவு கொண்டா டாத வகையில் தொந்தரவு செய்கிறாள். தனக்கு நேரிடும் பிரச் சனைகளை நாயகன் எவ்விதம் எதிர் கொண்டு மனைவியுடன் குடும்பம் நடத்துகிறான் என்பதுதான் கதை.

முதலிரவு நடக்காத வேளையில் நாயகனுக்கு ஏற்படும் ஏமாற்றம், தவிப்பு, ஏக்கம் கலந்த காட்சிகள் யூத் ரசிகர்களை கவர்ந்திருந் தாலும் கணவன் மனைவி இருவரும் எவ்விதம் இல்லறத்தை போற்ற வேண்டும்.என்ற மெசேஜையும் சொல்லியுள்ளோம்’’ என்றார்.
ரா