அமிதாப் எடுத்த அதிரடி முடிவு
Vannathirai magazine, Vannathirai weekly magazine, Tamil Magazine Vannathirai, Tamil magazine, Tamil weekly magazine, Weekly magazine

            ‘ஜோக்கர்’ படத்தில் மருத்துவ கல்லூரி மாணவியாக நடிக்கிறார் சோனாக்ஷி சின்ஹா.

‘டான் 2’ படத்தில் ஸ்டன்ட் காட்சிகளில் நடித்திருக்கிறார் பிரியங்கா சோப்ரா.

‘தேஸ்’ படத்தில் பைக் சேசிங் காட்சியில் நடித¢தபோது காயம் அடைந்திருக்கிறார் மோகன்லால்.

தனது செல்ல நாய்க்குட்டி இறந்ததால் சோகமாக இருக்கிறாராம் சோனம் கபூர்.

‘ராஸ்கல்ஸ்’ படத்தில் அஜய்தேவகனுடன் முத்தக் காட்சியில் நடித்துள்ளார் கங்கனா.

‘எவனோ ஒருவன்’ இயக்கிய நிஷிகாந்த் காமத், ‘காக்க காக்க’ ரீமேக்கான ஃபோர்ஸ் இயக்கி வருகிறார்.

தென்னிந்திய படங்களை இந்தியில் ரீமேக் செய்வதை கண்டித்திருக்கிறார் சன்னி தியோல்.

சினிமாவில் மீண்டும் நடிக்க வந்த வாய்ப்பை ஏற்க மறுத்துவிட்டார் லாரா தத்தா.

சிங்கப்பூர்தான் தனது பேவரைட் ஹாலிடே ஸ்பாட் என்கிறார் நிஷா கோத்தாரி.

இனி ராம்கோபால் வர்மாவுடன் பணியாற்றுவதில்லை என முடிவெடுத்துள்ளார் அமிதாப்.

வாரத்தில் 3 வெளிநாட்டு படங்களை பார்ப்பதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார் அம்ரிதா ராவ்.

இரவு பார்ட்டிகளுக்கு செல்வதை தவிர்த்து வருகிறாராம் சமீரா ரெட்டி.

காதலர் ரன்தீபுடன் சேர்ந்து நடிக்க வந்த வாய்ப்பை கால்ஷீட் பிரச்னையால் மறுத்துள்ளார் நீது சந்திரா.

விஷால் பரத்வாஜ் இயக்கும் படத்தில் இம்ரான் ஹாஷ்மியுடன் கொன்கனா சென் நடிக்கிறார்.

காதலன் ஜான் ஆப்ரகாமுக்கு விலை உயர்ந்த வாட்ச் ஒன்றை பரிசளித்திருக்கிறார் பிபாஷா பாசு.
ஜியா