திகில் மேட்டர்
Vannathirai magazine, Vannathirai weekly magazine, Tamil Magazine Vannathirai, Tamil magazine, Tamil weekly magazine, Weekly magazine

           60ம் ஆண்டு நடைபெறுகிற கதை போல் ‘வாகை சூடவா’ படத்தை இயக்கியுள்ளதை படித்து ஆச்சரியமடைந்தேன். இயக்குநர் சற்குணத்துக்கு எங்களது சபாஷ்!
 பா.பெல்சியா, நெல்லை.

கோடி ரூபாய் கொடுத்தாலும் ‘தேநீர் விடுதி’ நாயகி  ரேஷ்மி கிளாமர் ரோலில் நடிக்க மாட்டேன் என்ற செய்தியை படித்து அதை வரவேற்கிறோம்.
 எஸ்.மணி, தேனி.

‘காஞ்சனா’ படத்தின் ஹீரோ அண்டு இயக்குநர் ராகவா லாரன்ஸ் பேட்டியை படித்தேன். படத்தை பத்தி அவர் சொல்லிய விதமே திகிலாக இருந்தது சார்..!
 வி.டி.சார்லஸ், புதுச்சேரி.

‘குருசாமி’ படத்தின் இயக்குநர் கே.ஆர்.விஷ்ராந்த் அப்படத்தை 11.11.11 அன்று 11 மணிக்கு திரையிடப்படுவதை சொல்லியிருப்பது வித்யாசமாக உள்ளது.
 சி.டி.குமரேசன்,தேனி.

‘சீக்ரெட் சரோஜா’ பகுதியில் நொந்துபோன தயாரிப்பாளரை பத்தி படித்து நாங்களும் நொந்து போயிட்டோம் தலைவா...!
 சி.வெங்கடேஷ்,திருச்சி.

‘கொடூரமான வில்லனாக நடித்தாலும் மைனர் பெண்ணை கற்பழிக்கும் காட்சி, கர்ப்பிணி பெண்ணை டார்ச்சர் பண்ணும் கேரக்டரில் நடிக்க மாட்டேன்’ என்று சம்பத் சொல்லியிருப்பது மகிழ்ச்சி.
எஸ்.சி.வனிதாராஜன்,சிவகங்கை.