சிவாஜி படம் ரிலீஸ்!



நடிகர் திலகம் சிவாஜி கணேசன் மறைந்தே பதினைந்து ஆண்டுகள் ஆகிறது. இந்நிலையில் அவர் நடிப்பில் ஒரு திரைப்படம் வெளியாகிறது என்கிற செய்தி சிவாஜி ரசிகர்களை திருவிழா கொண்டாட்டத்துக்கு தயாராக்குகிறது.

பதினெட்டு வருடங்களுக்கு முன்பு பிரதாப் போத்தன் இயக்கத்தில் மோகன்லாலோடு இணைந்து மலையாளத்தில் ‘யாத்ரா மொழி’ என்கிற படத்தில் சிவாஜி நடித்திருந்தார். திலகன், பிரகாஷ்ராஜ், ரஞ்சிதா ஆகியோரும் நடித்திருந்த இந்தப் படத்துக்கு இளையராஜாவின் இசை மணிமகுடமாக அமைந்தது. இப்படம் இப்போது தமிழில் டப்பிங் செய்யப்பட்டு ‘பயணத்தின் மொழி’ என்கிற பெயரில் வெளியிடப்பட இருக்கிறதாம்.

- ராஜ்