ஜீரோவுக்கு சர்வதேச விருது!



இயக்குநர் ஷிவ்மோகாவின் இயக்கத்தில் வெளிவந்த ‘ஜீரோ’ திரைப்படத்தில் அஸ்வின், ஷிவதா, ஜேடி சக்கரவர்த்தி ஆகியோர் நடித்திருந்தனர். சஸ்பென்ஸ் த்ரில்லரான இந்த திரைப்படம் வெளிவந்தபோதே விமர்சகர்களின் பாராட்டுகளை அள்ளியது.

வித்தியாசமான கற்பனை, திரைக்கதை சொல்லுதலில் புதுமையான வடிவம் போன்றவற்றை கணக்கில் கொண்டு நியூயார்க்கில் இருக்கும் பிரபலமான இன்ஸ்டிட்யூட் ஒன்றின் விருதினை ‘ஜீரோ’ வென்றிருக்கிறது.

“மாறுபட்ட படம் என்கிற வகையில் இந்த விருது எங்களுக்கு கிடைத்திருக்கிறது. எங்களுடைய கன்னி முயற்சியே சர்வதேச அங்கீகாரத்தை அடைந்திருப்பது எனக்கு மட்டுமின்றி எங்கள் குழுவினர் மொத்தத்துக்கும் உற்சாகத்தை அளித்திருக்கிறது” என்கிறார் இயக்குநர் ஷிவ்மோகா.

- கே