மோகன்லால்- கவுதமி நடிப்பில் போட்டி!



மலையாளத்தில் பெருவெற்றி கண்ட ‘ஹிஸ் ஹைனஸ் அப்துல்லா’ படத்துக்குப்பிறகு மோகன்லால் - கவுதமி மீண்டும் இணைசேரும் படம் ‘நமது’. தமிழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று மொழிகளில் உருவாகிறது இந்தப்படம்.

வசனம் - பாடல்களை மதன் கார்க்கி எழுத, சந்திரசேகர் ஏலட்டி இயக்குகிறார்.‘‘நான்கு முக்கிய கதாபாத்திரங்களைச் சுற்றியே கதை சுழலும். நான்கு பேரும் அறிமுகமானவர்களோ அல்லது உறவினரோ இல்லை.

நான்கு பேரின் கதைகளும் சந்திக்கும் இடம்தான் க்ளைமாக்ஸ். படப்பிடிப்பின்போது மோகன்லாலுக்கும் கவுதமிக்கும் இடையே பெரிய நடிப்புப்போட்டியே நடந்தது. ஒரு காட்சியில் மோகன்லாலின் நடிப்புக்கு கைதட்டிய படக்குழு, அடுத்த காட்சியில் கவுதமிக்கு கரகோஷங்களை எழுப்பியது’’ என்கிறார் இயக்குநர் சந்திரசேகர் ஏலட்டி.

-என்