செயல்



புலியுடன் மோதும் எலி!

படிக்கும் வயதிலேயே நாயகி தருஷியை லவ்வுகிறார் நாயகன் ராஜன் தேஜேஸ்வர். இதனிடையே தனது ஏரியா தாதா ஒருவருடன் மோதி ஜெயிக்கிறார். ஹீரோவின் வீரதீர செயலைப் பார்த்து ஆருஷியை மணமுடித்து வைக்க முடிவு செய்கிறார் அவருடைய அப்பா.

ஒரு கட்டத்தில் இழந்த செல்வாக்கைத் தூக்கி நிறுத்த நாயகனை வில்லன் துரத்துகிறார். வில்லனுடன் மோதினால் காதலி கிடைக்கமாட்டார் என்று வில்லனிடமிருந்து எஸ்கேப் ஆகிறார் நாயகன். என்ன ஆனது என்பது மீதிக் கதை.

அறிமுக நாயகன் ராஜன் தேஜேஸ்வர், நடனம், ஆக்‌ஷனில் வெளுத்து வாங்கியிருக்கிறார். ஆருஷி கண்களை உருட்டி, காதல் பாஷை பேசியிருக்கிறார். வில்லனாக சமக் சந்திரா மிரட்டியிருக்கிறார் வாழ்த்துகள். ரேணுகா, முனீஸ்காந்த், வினோதினி ஆகியோர் கொடுத்த வேலையை சிறப்பாகச் செய்திருக்கிறார்கள்.சித்தார்த் விபினின் இசையில் அனைத்து பாடல்களும் கேட்கும் ரகம். இளையராஜாவின் ஒளிப்பதிவு அருமை.

விஜய்யை வைத்து ‘ஷாஜகான்’ படம் எடுத்த இயக்குநர் ரவி அப்புலு இதில் இளம் ஹீரோவை நம்பி படம் எடுத்திருக்கிறார். அதில் வெற்றியும் பெற்றிருக்கிறார். சிம்பிள் கதையாக இருந்தாலும் சுவாரஸ்யமான காட்சிகள் மூலம் படத்தை கரை சேர்த்திருக்கிறார்.