தூக்குதுரை.. தூள் தல!



ரீடர்ஸ் கிளாப்ஸ்!

2018 வருட டாப்-5 ஹீரோ பட்டியலில் அஜித் இடம்
பெறாத குறை இருந்தது. அஜித்தை அட்டையில் பார்த்ததால் அந்த குறை நிவர்த்தி ஆகிவிட்டது. தூக்குதுரை, தூள் தல.
- சங்கீத சரவணன், மயிலாடுதுறை.

கலைநயமிக்க கலக்கலான யாமினியின் நடுப்பக்கம் கிளுகிளுக்க வைத்தது. பூசணிக்காயை மறைக்கதான் முடியாது.
- த.சத்தியநாராயணன், அயன்புரம்.

டாப்-5 செலக்‌ஷனில் ‘வண்ணத்திரை’ ஆசிரியர் குழுவினரின் உழைப்பு தெரிகிறது. நடுநிலைமையான தேர்வு. வாழ்த்துகள்.
- வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு.

‘டைட்டில்ஸ் டாக்’ பகுதியில் பாடலாசிரியர் முத்தமிழின் ‘இறுதிச்சுற்று’ கட்டுரை விறுவிறுப்பாக இருந்தது.
- எம்.சேவுகப்பெருமாள், பெருமகளூர்.

‘சரோஜாதேவி பதில்கள்’ பகுதியில் உங்கள் லேஅவுட் ஆர்ட்டிஸ்ட் தேர்ந்தெடுத்து போட்டிருந்த ஆரஞ்சு கலர் ஆசைமரம் அட்டகாசம்.
- இரா.வளையாபதி, தோட்டக்குறிச்சி.

‘மின்னுவதெல்லாம் பொன்தான்’ தொடர் கால இயந்திரம் மாதிரி தமிழ் சினிமாவின் கடந்த காலங்களுக்குள் எங்களை பிரவேசிக்க வைத்து, மலரும் நினைவுகளை கிளறுகிறது.
- எம்.லோகு, திருவண்ணாமலை.

சினிமாவுக்கு வந்திருக்கும் கணக்கு வாத்தியார் அரசர் ராஜா, நல்லா கணக்கு பண்ணுவார் என்று நம்புவோம்.
- அ.காஜாமைதீன், நெய்க்காரப்பட்டி.