சுயேச்சை!



சரோஜாதேவி பதில்கள்

* வெயிலுக்கு ஏற்ற பழம் எது?
- கே.கே.பி.மணியன், பெங்களூர்.
ஜூஸ் போட்டு குடிக்க எலுமிச்சை. கடித்து ருசிக்க மாம்பழம்.

* தேர்தலில் உங்க விருப்பம் சுயேச்சையா, கூட்டணியா?
- சங்கீத சரவணன், மயிலாடுதுறை.
கூட்டணிதான் எப்பவுமே. யாருமே சேர்த்துக்கலைன்னாதான் சுயேச்சை.

* முன்னேமாதிரி டார்ச்லைட் பிரகாசமா எரியுறதில்லை சரோ. என்ன செய்ய?
- கே.நடராஜன், திருவண்ணாமலை.
பேட்டரியை ரீசார்ஜ் பண்ணுங்க.

* பீச், பார்க், மொட்டை மாடி. காதலர்களுக்கு ஏற்ற இடம் எது?
- த.சத்தியநாராயணன், அயன்புரம்.
தியேட்டர். அங்கேதான் லைட்டையெல்லாம் ஆஃப் பண்ணுவாங்க.

* காதலியை வெட்கப்படவைக்க என்ன செய்யவேண்டும்?
- வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு.
அவங்க இதுவரை பார்க்காத இடத்தை சுத்திக் காட்டுங்க.