மீன் பொண்ணு!



Sea food டார்லிங் என்றாலே நிக்கி கல்ராணிதான். மீன் என்றால் உயிர். ‘‘நல்லா சாப்பிடுங்க. ஹேப்பியா வாழுங்க.’ என்பது நிக்கியின் பாலிசி. ‘‘எவ்ளோ வேணா சாப்பிடலாம். ஆனா, ரொம்ப ஸ்லிம்மாவே இருப்பிங்கனு ஒரு சூப்பர் பவர் கிடைச்சாலே போதும்.
ஹேப்பியாகிடுவேன். ஏன்னா, எனக்கு எப்பவும் வயிறுமுட்ட சாப்பிட பிடிக்கும். ஆனா, நிறைய சாப்பிட்டா குண்டாகிடுவோம்னு பயமிருக்கும். ஹெல்த்தியா, ரசனையா சாப்பிடணும்னு நினைப்பேன். ஜிம் ஒர்க் அவுட்டை நினைச்சுப் பார்த்து கடைசியில விருப்பப்பட்ட எதையும் சாப்பிடாமல் விட்டுடுவேன்’’ என பெருமூச்சு விடுகிறார் நிக்கி.

- மை.பாரதிராஜா