ஒருவரிச் செய்திகள்




*சென்னை-மயிலை கோலவிழி அம்மனின் திருவிழிகள் மனிதர்களுக்கு இருப்பதுபோலவே உயிரோட்டமுள்ளதாக அமைந்துள்ளது.

*விருத்தாசலம் அருகே உள்ள ஸ்ரீமுஷ்ணத்தில் சப்தகன்னியர்களும் தாயாரின் தோழிகளாக பூஜிக்கப்படுகின்றனர்.

*சிதம்பரத்தில் உள்ள தில்லைக்காளி ஆலய பிராகாரத்தில் கடம்பவன தட்சிணாமூர்த்திரூபிணி எனும் பெயரில் பெண் வடிவ தட்சிணாமூர்த்தியை தரிசிக்கலாம்.

* தன் பக்தனுக்காக தீபாவளி அன்று திதி கொடுக்கும் கும்பகோணம் சார்ங்கபாணி பெருமாளுக்கு அன்றைய நிவேதனம், திதி சமையல்தான்.

* யானை முகத்தையும் தேள் போன்ற வரிவரியான உடலமைப்புடன் உள்ள விருச்சிகப் பிள்ளையாரை கும்ப கோணம் ஆடுதுறையிலிருந்து 3 கி.மீ. தொலைவில் உள்ள மருத்துவக்குடியில் தரிசிக்கலாம்.

* ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடிக்கு கிழக்கே 14 கி.மீ. தொலைவில் உள்ள நயினார் கோயில் நாகநாதர் சந்நதியில் குழந்தைகளை ஆலயத்திற்கு நேர்ந்து விட்டு, பின் ஏலம் கேட்டு அவர்களை திரும்பப் பெறும் பிரார்த்தனை வழக்கத்தில் உள்ளது. இதை விற்று வாங்குதல் என அழைக்கின்றனர்.

* திருச்சி, சிறுவாச்சூர் மதுரகாளிக்கு ஆலயத்திலேயே மாவிடித்து மாவிளக்கு ஏற்றுகின்றனர். வீட்டிலிருந்து மாவு எடுத்துச் செல்ல அங்கு அனுமதி இல்லை.

* சென்னை, தாம்பரம் - காஞ்சிபுரம் மார்க்கத்தில் உள்ள பண்ருட்டிக் கண்டிகையில் மகாமேரு, மாதங்கி, வாராஹி  திதிநித்யா தேவிகள் போன்ற அனைத்து தேவியர்களுமே யந்திர வடிவிலேயே அருள்கின்றனர்.

* வேலூர் அருகில் உள்ள சேண்பாக்கத்தில் 11 சுயம்பு விநாயகர்கள் ஒரே கருவறையில் அருள்கின்றனர்.