ஜோக்ஸ்



‘‘இதே தொகுதியில நான் தொடர்ந்து ஐந்து முறை ஜெயிச்சிருக்கேன்... இதுல இருந்து உனக்கு என்னய்யா தெரியுது?’’‘‘உங்க தொகுதி மக்கள் எவ்வளவு பெரிய ஆபத்தைப் பார்த்தும் பயப்படாத தைரியசாலிகள்னு தெரியுது தலைவரே!’’
- கே.ஆனந்தன், தர்மபுரி.

ஸ்பீக்கரு...

‘‘செருப்பு வீசும் அன்பர்கள் அதற்கென ஒதுக்கப்படும் நேரத்தில் வீசி முடித்துவிட்டு தலைவரைப் பேச விடுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்...’’
- பா.ஜெயக்குமார்,
வந்தவாசி.

‘‘மேடையேறிய தலைவர் ஏன் பேசாம குழப்பத்தோட நிக்கறார்?’’
‘‘எல்லோரும் கூட்டணிக்குள்ள வந்துட்டதால, யாரை திட்டிப் பேசறதுன்னு தெரியலையாம்..!’’
- பெ.பாண்டியன்,
கீழசிவல்பட்டி.

‘‘தலைவர் தேர்தல் நிதி திரட்ட ஆரம்பிச்சுட்டார்னு நினைக்கிறேன்...’’
‘‘எப்படிச் சொல்றே..?’’
‘‘நம்ம ஏரியாவுல திருட்டு அதிகமாயிடுச்சே..!’’
- தாமு, தஞ்சாவூர்.

‘‘நம்ம தலைவர் தேர்தல் மூடுக்கு வந்துட்டார்னு எப்படிச் சொல்ற?’’
‘‘ஓட்டப் பந்தயத்தைத் துவக்கி வைக்க... ‘2 3 4...’னு சொல்றாரே!’’
- நா.கி.பிரசாத், கோவை.

ஸ்பீக்கரு...


‘‘பெரியோர்களே... தாய்மார்களே... லாரிகள் மூலம் ‘டவுன் லோடு’ செய்யப்பட்டிருக்கும் தொண்டர்களே...’’
- பர்வீன் யூனுஸ், ஈரோடு.

‘‘கூட்ட்டணியில இருக்கற கட்சிகளுக்கு தலைவர் என்ன கண்டிஷன் போடறார்..?’’
‘‘அவர் ஜெயிலுக்குப் போனா ஜாமீன்ல எடுக்கணுமாம்..!’’
- பெ.பாண்டியன், கீழசிவல்பட்டி.