தமிழுக்கு அறிவியல் விருது!



ராஜபாளையத்தைச் சேர்ந்த டாக்டர் கு.கணேசனுக்கு மத்திய அரசின் ‘தேசிய அறிவியல் தொழில்நுட்ப விருது’ வழங்கப்பட்டுள்ளது. இந்தியாவில்  அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் பற்றி பொதுமக்களிடம் தொடர்ந்து  விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் எழுத்தாளர்களுக்கு ஆண்டுதோறும் வழங்கப்படும் இவ்விருது, ஒரு நினைவுப் பரிசையும் ஒரு லட்ச ரூபாய் ரொக்கப் பரிசையும் தகுதிச் சான்றிதழ் ஒன்றையும் உள்ளடக்கியது.

இந்தியாவில் அறிவியல் எழுத்தாளர்களுக்குக் கிடைக்கும் மிக உயரிய விருது இதுதான் எனலாம். தமிழ் இதழ்களில் மருத்துவம் குறித்த கட்டுரைகளை எழுதி வரும் இவருக்கு இவ்விருது வழங்கப்பட்டிருப்பது நமக்கெல்லாம் பெருமை!

நூற்றாண்டு கொண்டாடும் காளி மார்க்!

நூற்றாண்ைடக் கொண்டாடி மகிழ்ந்திருக்கிறது தென்னிந்திய மக்களின் அபிமான குளிர்பான நிறுவனமான காளிமார்க் சோடா! இதையொட்டி ‘விப்ரோ’ பன்னீர் சோடா புதிதாக அறிமுகம் செய்யப்பட்டது. 1916ல் விருதுபட்டி எனச் சிறிய கிராமமாய் இருந்த விருதுநகரில் பி.வி.எஸ்.கே.பழனியப்பன் நாடார், அவரது மனைவி உண்ணாமலையம்மாளுடன் சேர்ந்து கோலி சோடா கம்பெனியாகத் துவங்கிய நிறுவனம் இது.

 இன்று காளிமார்க் நிறுவனத்தின் குளிர்பானங்கள் சிங்கப்பூர், ஐக்கிய அரபு அமீரகம், இலங்கை மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. 2015ம் ஆண்டில் ‘இந்தியாவின் மிகச்சிறந்த பிராண்டு’ விருது பெற்றது காளி மார்க். வாயுவேற்றப்பட்ட குளிர்பானங்கள் பிரிவில் காளிமார்க்கின் போவன்டோவிற்கு பத்தாவது இடம் கிடைத்துள்ளது.

‘‘நாங்கள் புதிய உச்சத்தை அடைய எங்களுக்கு ஆதரவளித்த வாடிக்கையாளர்களுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்’’ என்கிறார் காளிமார்க்கின் நிர்வாக இயக்குநர் கே.பி.ஆர். தனுஷ்கோடி.

வேளச்சேரியில் பிரின்ஸ் ஜுவல்லரி!

சென்னை பிரின்ஸ் ஜுவல்லரியின் பிரத்யேக ஷோரூம் இப்போது வேளச்சேரியில் பிரமாண்டமாய் திறக்கப்பட்டுள்ளது. தங்க வர்த்தகத்தில் 83 வருட பாரம்பரியம் கொண்ட இந்நிறுவனத்துக்கு சென்னையில் 3வது தங்க மாளிகை இது.

6 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் இரண்டு தளங்கள் உள்ளன. தங்க நகைகளில் முகூர்த்தம் கலெக்‌ஷன், குழந்தைகளுக்கான ‘பேபி பிரின்சஸ்’ ஆகியவை இங்கே ஸ்பெஷல். வைர நகைகளில் சாலிட்டர் கலெக்‌ஷன், நவா, அல்ரோசா, சோல்மேட்ஸ், பிரின்சஸ் என பிரத்யேக கலெக்‌ஷன்கள் உள்ளன.

திறப்பு விழாவை முன்னிட்டு நிறைய சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்தக் கிளையின் ‘பிரின்சஸ் கோல்டு பர்சேஸ்’ திட்டத்தில் இப்போதே சேர்ந்து முதல் தவணையை இலவசமாகப் பெறலாம்.

11 மாதங்களுக்குப் பிறகு நகையை செய்கூலி மற்றும் சேதாரம் எதுவுமின்றி வாங்கிக்கொள்ளலாம். ‘‘வேளச்சேரியும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளும் அதிவேக வளர்ச்சியடைந்து வருகின்றன. இப்பகுதியில் வசிக்கும் மக்களின் வசதிக்காகவே இந்த ஷோரூமை அமைத்துள்ளோம்’’ என்கிறார் பிரின்ஸ் ஜுவல்லரி நிறுவனர் பிரின்ஸன் ஜோஸ்!