டைமிங் அலாரம்!



-ரீடர்ஸ் வாய்ஸ்

அமெரிக்கா, ஐரோப்பா, துபாய் என ஆல் ரவுண்டு ஆல் நியூ தமிழர்களின் வீட்டில் செய்த பொங்கல் டிரெடிஷனல் தேன்சுவை.
- கா.சிந்தாமணி, கோவை.

‘சிவலிங்கா’ லாரன்ஸ், ரித்விகாவின் கெமிஸ்ட்ரி, சும்மா தெறி ப்யூட்டி. பக்குவப் பேச்சுதான் பி.வாசுவின் ஹிட் சீக்ரெட்.
- ஆர்.மலர்மன்னன், சென்னை - 78.

ராதாரவி ஆவேசம் படிக்கும் நமக்கும் அப்படியே ட்ரான்ஃபார்ம் ஆகுதே! பொங்கலன்னைக்கு ஏன் பாஸ் இம்புட்டு கோபம்?
- கி.பா.ராஜகோபாலன், வேலூர்.

கொண்டாட்டங்களின்போது கணையம் குறித்த துல்லிய தகவல்களை கூறிய செகண்ட் ஒப்பீனியன், டைமிங் அலாரம்.
- ஜி.மணிவண்ணன், காரைக்குடி.

எஸ்.பி.முத்துராமனின் கனிந்த பேச்சிலும், உழைப்பு வழியேயும் அவரின் வாழ்வு வழியேயும் கற்றுக்கொள்ள வேண்டியது எக்கச்சக்கம்.
- ஆர்.எஸ்.கேசவன்குணா, திருத்தணி.

ஊஞ்சல் தேநீரில், பாடகர் தேனிசை செல்லப்பாவின் இன்ட்ரோவோடு, பணம் குறித்த பெரியாரின் சொல்வெட்டு வார்த்தைகளும் ஆல்டைம் ஹிஸ்டரி.
- க.ரா.புகழேந்தி, திருவண்ணாமலை.

ஜல்லிக்கட்டின் திரைமறைவு உண்மைகள், பகீர். உயிர்வதை என்ற சொல்லின் பிளாக் பேக்கிரவுண்ட் பிசினஸ் உத்திகள் அநியாயம்.
- பி.கணியன்மாறன், திருப்பூர்.

பளபள ஸ்ட்ரக்சரில் சூப்பர் நாகினியின், ஃபிரன்ட் அண்ட் பேக் லுக்கை பார்த்து தூக்கம் போச்சு பாஸ்!
- கே.சிவகுமார், ஈரோடு.

தமிழ்நாட்டு நீதிமான்களில், தன் வக்கீல் தொழிலில் உழைப்பு மூலம் ஊரெங்கும் புகழ் பரப்பிய வி.வி.சீனிவாச அய்யங்காரின் உழைப்பு பரவச பயணம்.
- ஏ.பி.மரகதம், காரமடை.

பசி வந்தால்தான் சோற்றைத் தொடவேண்டும் என்று ஹங்கர் டெக்னிக் சொல்லிய உயிரமுது, உயிருக்கு நல்லமுது.
- ஜெ.மனுஷ்மிகா, சென்னை - 4.

டெக்னோவிலும் நேச்சர் பூ பூக்க, மரங்களை நடவு செய்யும் மனிதர்களை ஒன்றிணைக்கும ட்ரீ ஆப் ஆசம்..
- ஆர்.எம்.கண்மணிஜீவா, நாகர்கோயில்.