ரிசர்வேஷன் விவசாயி!



ரோனி

இந்தியாவில் தலித், பழங்குடியினருக்கு மேல்நிலைக்கல்வியில் நுழைய ஒரே வாயில், ரிசர்வேஷன்தான். இந்நிலையில் கேரளாவைச் சேர்ந்த இளைஞர் ‘ரிசர்வேஷன் என் வாழ்க்கையை, கனவை அழித்துவிட்டது’ என குமுறல் பதிவை ஃபேஸ்புக்கில் பதிந்திருக்கிறார். லிஜோ ஜாய் என்ற இளைஞர் பிளஸ்டூவில் 79.9% மார்க் எடுத்து கவுன்சிலிங்கில் கலந்துகொண்டாலும் எந்த கல்லூரியிலும் இடம் கிடைக்கவில்லை.



‘கல்லூரியில் இடம் கிடைக்க ரிசர்வேஷன் அல்லது பணம் தேவை. ஆனால் இரண்டுமே என்னிடம் இல்லை என்பதால் வேறுவழியின்றி விவசாயம் செய்து வருகிறேன். 50% மார்க் வாங்கிய என் நண்பர்களுக்கு ரிசர்வேஷனில் இடம் கிடைத்திருக்கிறது. ஆனால், நான் நன்றாக படித்து மார்க் வாங்கியும் பயனில்லை...’ என கண்கலங்கி லிஜோ ஜாய் போட்ட பதிவுகளோடு, நிலத்தில் வேலை செய்யும் அவரது புகைப்படங்கள் செம எமோஷனல். இப்பதிவுகள், ரிசர்வேஷன் இனியும் வேண்டுமா என்பது குறித்த கடும் விவாதத்தை சமூக வலைத்தளங்களில் ஏற்படுத்தியதோடு ஹாட் வைரலாகியுள்ளன.