சீண்டிய இந்தியர்கள்!



ரோனி

உயர்கல்வியில் சேர உதவும் IIT-JEE தேர்வுக்கு இன்று 10ம் வகுப்பிலிருந்தே ட்யூஷன் போவது வழக்கம். ஏன்? கொஸ்டின் பேப்பர் அவ்வளவு ரஃப் அண்ட் டஃப். அதை டேக் இட் ஈஸியாக எழுதிய மாணவனுக்கு கிடைத்த பரிசு என்ன தெரியுமா? ஆக்ஸ்‌ஃபோர்ட் யுனிவர்சிட்டியில் மூன்றாமாண்டு இயற்பியல் படிக்கும் ஜேக் ஃப்ரேஸர், குவாரா தளத்தில் எதேச்சையாக ஐஐடி கேள்வித்தாளைப் பார்த்தார். நம்மூர் குறுக்கெழுத்துப் போட்டிபோல பரபரவென விடை எழுதியபின் பார்த்தால், எக்சாம் டைமின் கால்வாசி நேரத்திலேயே பரீட்சையை முடித்திருந்தார்!



இந்தத் தேர்வுக்காகவே தன் ஆயுளை அர்ப்பணிக்கும் மகாதீரர்களான இந்தியர்களில் சிலருக்கு இது பீதியைக் கிளப்பியது. எரிச்சலோடு ஃப்ரேஸரின் குடும்பத்தினரின் ஃபேஸ்புக், ட்விட்டர் கணக்குகளை ஃபாலோ செய்து சீண்டல் கமெண்டுகளையும் ஆபாச போட்டோக்களையும் பதிவிட... ‘நேரத்தை வீண் செய்யவேண்டாம் ஃப்ரெண்ட்ஸ்!’ என்பதுதான் விரக்திக்குள்ளான ஃப்ரேஸரின் ஒரே பதில்!