செல்ஃபியின் நஷ்டம் 2 லட்சம் டாலர்கள்!



ரோனி

கல்யாணம் டூ சாவு வரை உள்ளே புகுந்து மூச்சு முட்ட செல்ஃபி எடுப்பதுதான் யங் ஜெனரேஷன் கெத்து. இந்நிலையில் அமெரிக்காவில் நடந்த ஒரு எக்சிபிஷனே செல்ஃபியால் என்ன கதிக்கு ஆளாச்சு தெரியுமா? லாஸ் ஏஞ்சல்ஸில் நடந்த ஓவியக்கண்காட்சி குதூகலமாகத் தொடங்கியது. பெயிண்டிங்கின் அர்த்தத்தை அறிவதை விட, பெயிண்டிங்குடன் நான், சிற்பங்களுக்கான நான் என பெண் ஒருவர் மும்முரமாக வளைத்துக் கிளிக்கிய செல்ஃபி சரியாக செட் ஆகவில்லை.



உடனே முட்டிக்கால் போட்டு சிற்பம் அருகில் செல்ஃபி எடுக்க முயன்றிருக்கிறார். அப்போது லைட்டாக கால் பேலன்ஸ் தவற, தன் மலர்மேனியை மெதுவாகத்தான் பின்னால் சாய்த்தார். என்ன செய்ய... அந்த இடத்தில் சிற்பம் இருந்து தொலைத்தது. விளைவு, ஒன்றின் மீது ஒன்று என அத்தனை ஓவியங்களும், சிற்பங்களும் சரிந்து விழுந்து உடைந்தன. இதன் மூலம் கண்காட்சி நடத்தியவர்களுக்கு ஏற்பட்ட நஷ்டம் 2 லட்சம் டாலர்கள்!