நற்பணி!



ரீடர்ஸ் வாய்ஸ்

மும்பை கார்ப்பரேஷனில் வேலை செய்யும் ரமேஷ், ஆயிரத்திற்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு கல்வி அமுதூட்டிய செயல்பாடு, தலைவணங்கி போற்றவேண்டிய நற்பணி!
- மனோகர், கோவை.

கபாலி தோட்டத்தில் வசிப்பவர்களின் கஷ்டங்களை படித்தவுடன் நெஞ்சே கனத்துவிட்டது. மயிலை கபாலி தோட்டத்தில் தீப்பெட்டி வீடுகள், குப்பைக் கூளங்கள்... இவ்வளவு அவலங்களா..?  
- தா.சைமன்தேவா, விநாயகபுரம். மயிலை கோபி, அசோக்நகர்.

மறக்கப்பட்ட கோட்டையை நினைவுபடுத்திய கட்டுரை அருமை. தொன்மை வரலாற்றை தன்னுள் தேக்கி நிற்கும் இத்தகைய கோட்டைகளை அரசு பாதுகாக்க முன்வரவேண்டும்.
- வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு.

விவசாயிகளின் தற்கொலைக்கு மத்திய, மாநில அரசுகளின் கொள்கைகள்தான் காரணம் என்பது வேதனைக்குரியது. பயிர்களுக்கு உரிய குறைந்தபட்ச விலையையேனும் உயர்த்தி வழங்கி மத்திய அரசு விவசாயிகளை காப்பாற்றுவது அதன் முதற்கடமை.
- மனோகர், கோவை.

பாக்ஸர் சிம்ரன் மெக்வான், சிறுவயதிலேயே இவ்வளவு கருணை உள்ளமா என வியக்க வைக்கிறார். ஏழைகளுக்கு கொடுக்கவே இவர் நிறைய போட்டிகளில் வெல்ல வேண்டும் என பிரார்த்திக்கிறோம்.
- எஸ்.ப்ரீத்தி, செங்கல்பட்டு.




பாதாமையும் நெய்யையும் பக்குவப்படுத்தி எப்படி லபக்குவது என்று கூறி எங்களை விழி பிதுங்க வைத்துவிட்டார் ‘இளைப்பது சுலபம்’ பா.ராகவன்.
- ஜானகி ரங்கநாதன், சென்னை.

தங்கம், வெள்ளி போதாதென்று ஆக்ஸிடைஸ்ட் நகைகள் என்று பளிச் படங்கள் போட்டு எங்கள் பர்சுக்கு வேட்டு வைக்கிறீர்களே, நியாயமா?
- ஆர்.சண்முகராஜ், சென்னை. வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு. இரா.வளையாபதி, தோட்டக்குறிச்சி.  

டாக்டர் பல்வந்த் காட்பாண்டே 102 வயதில் செய்வது பத்து மணிநேர சேவையேதான். அவரின் அர்ப்பணிப்பான பணி தொடரட்டும்.
- தா.சைமன்தேவா, விநாயகபுரம்.

அசத்தும் ஒளிப்பதிவாளர்களைப் பற்றி அப்டேட் கட்டுரைத் தொகுப்பு ஸ்பெஷல் சிறப்பு.
- த.சத்தியநாராயணன்,சென்னை. எஸ்.பூதலிங்கம், நாகர்கோவில்.

எண்ணூர் பற்றி அரிய தகவல்களை சேகரித்து அசத்திவிட்டீர்கள். சாம்பல் கழிவுகள்தான் அந்த ஊரை அழித்து வருகின்றன என்பதை அறியும்போது கண்கள் கலங்கின.   
- சத்தியநாராயணன், சென்னை. வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு. எஸ்.பூதலிங்கம், நாகர்கோவில்.
   
பாக்கெட் நாவல்களில் புதுமை படைத்த ஜி.அசோகனின் பணி பாராட்டுக்குரியது. அசோகனின் பேட்டியும் அவரது நாவல்களைப் போலவே விறுவிறு வேகம். எழுத்தாளர்களுக்கும், வாசகர்களுக்கும் தனியாக மெகா விழா நடத்தி கௌரவித்த அற்புத மனிதர் அவர்.
- மனோகர், கோவை. என்.சண்முகம், திருவண்ணாமலை. ஆர்.சண்முகராஜ், சென்னை. வெ.லட்சுமிநாராயணன், வடலூர்.