இது ரத்தம் குடிக்கிற காட்டேரி அல்ல : காட்டேரி சீக்ரெட்ஸ்



மை.பாரதிராஜா

‘‘படப் பேரு ‘காட்டேரி’. உடனே ‘கொடூரமான ரத்தம் குடிக்கிற பேய்க் கதையா இருக்குமோ’னு தோணும்.  பயந்துடாதீங்க. இது டிபிக்கலான பேய் கிடையாது. ரொம்பவே வித்தியாசமான ஒரு பேயை பார்க்கப்  போறீங்க!‘காட்டேரி’னா ‘பழைய மனிதர்கள்’, ‘மூதாதையர்கள்’னு நிறைய அர்த்தங்கள் இருக்கு. என் முதல்  படத்துல ‘பன்னி மூஞ்சி வாயன்’ கேரக்டர் வரும். அதே மாதிரி இந்தப் படத்துலயும் ரகளையான பல கேரக்டர்ஸ்  இருக்கு!சுருக்கமா சொல்லணும்னா குட்டீஸுக்கு பிடிக்கிற மாதிரி ‘காட்டேரி’ இருக்கும்!’’ நம்பிக்கையுடன்  பேசுகிறார் இயக்குநர் டிகே. காமெடி பேய் பட டிரெண்டை தொடக்கி வைத்த ‘யாமிருக்க பயமே’, ‘கவலை  வேண்டாம்’ படங்களின் இயக்குநர் இவர்.

‘‘என் முதல் ரெண்டு படங்களும் ஞானவேல் ராஜா சாருக்கு பிடிக்கும். சரியான பப்ளிசிட்டி இல்லாததுனால ‘கவலை  வேண்டாம்’ ரிலீசானதே தெரியாமப் போயிடுச்சு. ரொம்ப வருத்தத்துல இருந்தேன். பிறகு சமாதானமாகி  ஞானவேல்ராஜா சாரை சந்திச்சு இந்த ஒன்லைனை சொன்னேன். ‘உடனே ஆரம்பிக்கலாம்’னு சொன்னதோடு  ‘காட்டேரி’னு டைட்டிலையும் அவரே வைச்சார்...’’ என்று சொல்லும் டிகே, கே.வி.ஆனந்தின் பட்டறையில் இருந்து  வந்திருப்பவர்.பூஜை அப்ப வேற


ஹீரோ... ஹீரோயின் ஓவியானு செய்திகள் வந்ததே..?

நிஜம்தான். தமிழ், தெலுங்குல ஒரே நேரத்துல பண்ணலாம்னு முதல்ல ஐடியா இருந்தது. எனக்கு தெலுங்கு தெரியாது.  அதனால தமிழ்ல முதல்ல பண்ணுவோம்னு முடிவெடுத்தோம். இந்தக் கதைக்கு பெரிய ஹீரோ செட்டாக மாட்டார்.  லோக்கல் பையன் லுக்குள்ள ஹீரோ தேவைப்பட்டார். வைபவ் படத்துக்குள்ள வந்தது இப்படித்தான். அப்புறம் ஓவியா.  கமிட்டானப்ப அவங்க கேட்ட சம்பளம் வேற. ஷூட் அப்ப இன்னும் அதிகமா கேட்டாங்க. கதையும் நான்கு ஹீரோயினா  மாறிச்சு. ஸோ, இப்ப வரலட்சுமி, ‘கப்பல்’ சோனம் பஜ்வா, ‘மீசையை முறுக்கு’ ஆத்மிகா, தெலுங்குப் பெண்  மணாலி ரத்தோர் நடிக்கிறாங்க.இது தவிர பொன்னம்பலம், ஜான் விஜய், கருணா, ரவி மரியானு நிறைய பேர்  பட்டையைக் கிளப்பியிருக்காங்க. என் முதல் படத்துக்கு இசையமைச்ச பிரசாத் கூட மறுபடியும் கூட்டணி  அமைச்சிருக்கேன். அரவிந்த் கிருஷ்ணாவின் அசோஸியேட் விக்கி ஒளிப்பதிவு பண்ணியிருக்கார்.

என்ன சொல்றாங்க சோனம் பஜ்வா?

‘கப்பல்’ படத்துக்குப் பிறகு மறுபடியும் அவங்க தாய்மொழி பஞ்சாப்புக்கே திரும்பிப் போயிட்டாங்க. அங்க அவங்க ஒரு  கோடிக்கு மேல சம்பளம் வாங்குற ஹீரோயின். ‘மறுபடியும் தமிழா...’னு யோசிச்சாங்க. போன்லேயே கதையைச்  சொன்னேன். உடனே கமிட் ஆகிட்டாங்க. படத்துல கொஞ்சம் செல்ஃபிஷ் பர்சனா கேரக்டர் பண்ணியிருக்காங்க. ஒரு  டாப் ஹீரோயினாகக்கூடிய அத்தனை தகுதிகளும் சோனத்துக்கு உண்டு. பிரமாதமான டான்சர். அழகா இருக்காங்க.  நிச்சயம் வேற லெவலுக்கு போவாங்க. படத்துல ஆத்மிகா சைக்கியாட்ரிஸ்ட். வரூவும், மணாலி ரத்தோரும் 1960கள்ல  நடக்கும் ஒரு பீரியட் போர்ஷன்ல வர்றாங்க.

‘யாமிருக்க பயமே’க்கு அப்புறம் யோகிபாபு டாப்லெவல் காமெடியன் ஆகிட்டாரே..?


சந்தோஷமா இருக்கு. ஆனா, ஸ்கிரிப்ட்டும், கேரக்டரும் ஸ்டிராங்கா இருந்தா எத்தனை காமெடி கேரக்டர்களை  வேணாலும் ஓர் இயக்குநரால ஸ்ட்ராங்கா கொண்டு வர முடியும்.‘ஆதித்யா’ சேனல்ல காமெடி பண்ணின குட்டி கோபி,  கருணாகரன்னு நிறைய பேர் ‘காட்டேரி’ல கலக்கியிருக்காங்க.

‘கவலை வேண்டாம்’ சரியா போகலைன்னதும் ஜீவா என்ன சொன்னார்..?


அந்த படத்துல நடிச்ச ஜீவா, காஜல் அகர்வால்னு எல்லாருமே ஹேப்பி. ‘நாம மறுபடியும் சேர்ந்து ஒரு படம்  பண்ணுவோம்’னு ஜீவா சொல்லியிருக்கார். அந்தப் படம் ரிலீசானப்ப பண மதிப்பிழப்பு பிரச்னைனால மக்கள் சிக்கித்  தவிச்சாங்க. அந்தச் சூழல்லயும் நல்ல படத்தை ஆதரிக்க மக்கள் தயாராதான் இருந்தாங்க.ஆனா, படத்தைத் தயாரிச்ச  நிறுவனம் பப்ளிசிட்டி பண்ணாம விட்டுட்டாங்க. இதுல ரொம்பவே ஹர்ட் ஆனேன். என் ஃப்ரெண்ட்ஸுக்குக் கூட அப்படி  ஒரு படத்தை நான் இயக்கினது தெரியாத அளவுக்கு ஆகிடுச்சு. இதையும் மீறி தியேட்டர் விசிட் அடிச்சப்ப வந்திருந்த  ஆடியன்ஸ் என்ஜாய் பண்ணினதைப் பார்த்தேன். சரியா விளம்பரம் செஞ்சிருந்தா நிச்சயம் மக்கள் வந்திருப்பாங்க.என் படம்னு இல்ல, அந்த நிறுவனம் தயாரிச்ச ‘கோ2’, ‘வீரா’க்குக்கூட இதே கதிதான். ஞானவேல்ராஜா சார்  படைப்பாளிகளை நல்லா ஹானர் பண்ணறார். ‘இது முடியும்,  இது முடியாது’னு ஆரம்பத்துலயே தெளிவா  சொல்லிடறார். கொடுத்த வார்த்தையைக் காப்பாத்துற தயாரிப்பாளர் அமையறது வரம்.