ஹார்வர்டில் இனவெறி!



ஹார்வர்டில் இனவெறி!

ஆசிய, அமெரிக்க மாணவர்களை இனவெறியுடன் நடத்துவதாக 388 ஆண்டுகள் தொன்மையான அமெரிக்க கல்வி  நிறுவனமான ஹார்வர்டு பல்கலைக்கழகம் சர்ச்சையில் சிக்கியுள்ளதென ‘நியூயார்க் டைம்ஸ்’ செய்தி  வெளியிட்டுள்ளது.கடந்த 2000 - 2015 வரையிலான காலகட்டத்தில் ஒரு லட்சத்து 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட  மாணவர்கள் அப்ளை செய்து தேர்வுகள் எழுதினாலும், தனிப்பட்ட ரீதியில் அட்மிஷன் ரேட்டிங்குகளை ஆசிய  மாணவர்கள் குறைவாகவே பெற்றுள்ளனர்.

இது ஒரு விதியாக உருவாக்கப்படாவிட்டாலும், ஆசிய, அமெரிக்க மாணவர்களை ஹார்வர்டு பல்கலைக்கழகம்  பாகுபாட்டுடன் அணுகுவது 2013ம் ஆண்டே விமர்சிக்கப்பட்டது.‘‘ஆசிய, அமெரிக்க மாணவர்களின் அட்மிஷன் விகிதம்  கடந்த பத்தாண்டுகளில் 29% உயர்ந்துள்ளது.  இதிலிருந்தே மாணவர்களை பாகுபாட்டுடன் நாங்கள் நடத்தவில்லை  என்பது நிரூபணமாகிறது!’’ என்கிறார் ஹார்வர்டு அதிகாரிகளில் ஒருவர்.                                

பாம்பின் வயிற்றில் ஆன்ட்டி!


இந்தோனேஷியாவைச் சேர்ந்த முனா தீவில் ஆன்ட்டி ஒருவர் தோட்டத்திற்குச் சென்றார். வெகுநேரமாகியும்  ஆளைக்காணவில்லை. பதறிப் போய் குடும்பமே தேடியதில் கிடைத்தது 23 அடி மலைப்பாம்புதான்! ஊரே திரண்டு  பாம்பின் வயிற்றைக் கிழித்து 54 வயது வாதிபா ஆன்ட்டியின் உடலை மீட்டுள்ளனர். இந்தோனேஷியா, பிலிப்பைன்ஸ்  நாடுகளில் மலைப்பாம்புகள் குறைந்தது ஆறு மீட்டர் நீளத்தில் காணப்படுவது சாதாரணம் என்றாலும் இப்போது கிடைத்த  பாம்பு அசாதாரண நீளம் கொண்டது. ‘‘இறந்த வாதிபாவின் தோட்டத்திலுள்ள பாறைப் பகுதிகளில் சொகுசாக  மலைப்பாம்புகள் வசித்துள்ளன...’’ என்கிறது ஹம்கா வட்டார போலீஸ்துறை.            

பிரேயருக்கு மறுத்ததால் மர்டர்!


புனித நூலை வாசித்து பிரார்த்திக்க மறுத்த சிறுமியை மாமா, அத்தை உள்ளிட்ட உறவினர்கள் அடித்து கழுத்தை  துப்பட்டாவில் இறுக்கிக் கொன்றுள்ளனர்.உறைய வைக்கும் இந்தச் சம்பவம் நடந்தது மும்பையின் அனடாப் பகுதியில். முதலில் பாத்ரூமில் விழுந்து இறந்தார் என தனியார் மருத்துவ மனையில் சான்றிதழ் வாங்கிய உறவினர்களின் குட்டு,  அரசு மருத்துவர்கள் செய்த போஸ்ட் மார்ட்டம் சோதனையில் உடைந்தது. கழுத்தில் துப்பட்டா இறுக்கிய தடயமும்,  உடம்பிலிருந்த காயங்களும் குற்றவாளி உறவினர்களைக் காட்டிக் கொடுத்தது. கொலையில் ஈடுபட்ட சிறுமியின் தந்தை  உட்பட எட்டுப் பேர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.

தொகுப்பு: ரோனி