சூயிங்கம் ஷூ!



பிளாஸ்டிக் கழிவுகளில் முக்கியமானது சூயிங்கம். பொழுதுபோகாமல் இருக்கும் சமயங்களில் மக்கள் சூயிங்கம்மை  சுவைத்து சுவர்களில் ஒட்டிவைப்பது, குப்பைகளில் எறிவது என்பதே இன்று பல லட்சம் டன்களாக எகிறியுள்ளது.இதனைத் தீர்க்க லண்டன் மற்றும் நெதர்லாந்து நிறுவனம் கூட்டுசேர்ந்து சூயிங்கம்மை ரீசைக்கிள் செய்து ஷூக்களைத்  தயாரித்துள்ளன!

Gumshoe எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த ஷூக்களில் மறுசுழற்சி செய்த சூயிங்கம்களின் அளவு 20%. ஒரு கிலோ  சூயிங்கம்மில் நான்கு ஜோடி ஷூக்கள் தயாரிக்கலாம். சூயிங்கம்மின் ஃப்ளேவரில் ரெடியாகும் ஷூவில் ரப்பர், தோல்  கலப்பு உண்டு. ஷூ தவிர சூயிங்கம் மூலம் பென்சில், ஸ்கேல், ரப்பர்பந்து தயாரிக்கும் ஐடியாவும் இக்கம்பெனிகளுக்கு
உண்டாம். அப்ப மக்கள் நிறைய சூயிங்கம் மெல்லணும்!  

- ரோனி