COFFEE TABLE



இத்தாலியில் எமி

எமி ஜாக்சனுக்கு இது வெக்கேஷன் டைம். தமிழில் சைலன்ட் மோடிலும், இன்ஸ்டாவில் ஆக்டிவ் மோடிலும் கலகலக்கும் பொண்ணு.  படப்பிடிப்பிலிருந்து கொஞ்சம் பிரேக் கிடைக்க, உடனே ரிலாக்ஸாக இத்தாலி பறந்துவிட்டார். ஷாப்பிங், போட்டிங் என தினமும் க்ளிக்கும்,  ஸ்மைலுமாக பதிவிட, லைக்குகளும் ஹார்ட்டின்களும் தூள் பறக்கின்றன.

அவமானம்

பெண்களுக்குப் பாதுகாப்பில்லாத நாடுகளில் முதலிடத்தைப் பிடித்திருக்கிறது இந்தியா. இது உலக அரங்கில் இந்தியாவின் மீதான மதிப்பைக்  குறைத்திருக்கிறது. பலரும் இந்த ஆய்வு முடிவுக்கு எதிராக தங்களின் குரலைப் பதிவு செய்துவருகின்றனர். ஆப்கானிஸ்தான், சோமாலியா,  பாகிஸ்தான் போன்ற நாடுகள் இந்தியாவுக்கு அடுத்தடுத்த இடங்களில் இருக்கின்றன.

இந்தியாவில் பெண்களுக்கு இருக்கும் பொருளாதாரச் சுதந்திரம், வேலை செய்யும் இடங்களில் அவர்களின் நிலை, அவர்களுக்கு எதிராக நிகழும்  வன்கொடுமைகள், பாலியல் ரீதியான சீண்டல்கள் உட்பட பலவற்றை கவனத்தில் கொண்டுதான் பெண்களுக்கு இந்தியாவில் பாதுகாப்பில்லை  என்கிறது அந்த ஆய்வு.  

ஸ்ட்ரீட் டான்ஸர்ஸ்

ஒரே நாளில் உலகப் புகழ்பெற்றுவிட்டார்கள் நைஜீரியா தெருக் குழந்தைகள். ஆறு முதல் 16 வயதுக்குள்ளான அந்தக் குழந்தைகள் தங்கள் இஷ்டம்  போல தெருவில் இறங்கி நடனமாடியிருக்கிறார்கள். வழிப்போக்கர் ஒருவர் அதை வீடியோவாக்கி யூ டியூப்பில் இறக்கிவிட, அது பாடகி ரிஹானாவின்  கண்ணில் பட்டிருக்கிறது. குழந்தைகளின் நடனம் ரிஹானாவை மயக்க, உடனே அவர் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் அதைப் பகிர்ந்துவிட்டார். அப்புறமென்ன... லைக்குகள் அள்ளுகின்றன.

ஸ்லீப்பிங் ப்யூட்டி

பாலிவுட்டில் பிரியங்கா சோப்ராவைப் பற்றிய ரொமான்ஸ் கிசுகிசுக்கள் ஏராளம். ஆனால், பிரியங்காவோ எதையும் கண்டுகொள்ளவில்லை. சமீபத்தில்  மும்பையிலிருந்து நியூயார்க்கிற்கு பிசினஸ் கிளாஸில் பறந்திருக்கிறார். அதுவும் ஜன்னலோர சீட். பயணத்தின்போது ஆழ்ந்து உறங்கும் புகைப்படத்தை  அவரே தனது இன்ஸ்டா பக்கத்தில் தட்டிவிட, பத்து லட்சம் லைக்குகளை நெருங்கி வைரலாகி வருகிறது.

லைட்டான ஸ்மார்ட்போன்  

சீனாவைச் சேர்ந்த ‘ஜியோனி’ நிறுவனம் புதுப்பொலிவுடன் ‘எஸ் 11 லைட்’ என்ற ஸ்மார்ட்போனை சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது. 5.70 இன்ச்  டிஸ்பிளே, 16 எம்பி செல்ஃபி கேமரா, 13 எம்பி பின்புற கேமரா, 32 ஜிபி இன்பில்ட் மெமரி, 3030mAh பேட்டரி திறனுடன் சகல வசதிகளும் இதில்  உள்ளன. குறைவான எடையில் இதனை வடிவமைத்ததுதான் ஹைலைட். மொபைல் ஷோரூம்களில் மட்டுமே கிடைக்கும் இந்த ஸ்மார்ட்போனின்  விலை ரூ.13,999.

குங்குமம் டீம்