COFFEE TABLE



இலி ட்ரீட்

இனிக்கிறார் இலியானா. பர்த்டே ஸ்பெஷலாக இன்ஸ்டாவில் பிகினி காஸ்ட்யூமில் பூமாராங் வீடியோ ஒன்றைப் பதிவிட்டு, வாழ்த்துகளோடு லைக்குகளையும் குவித்துள்ளார். தவிர, பிறந்தநாள் பரிசாக அவர் நடித்த ‘பாகல்பண்டி’ ஹிட் அடித்ததில் செம ஹேப்பி. அனில்கபூர், ஜான் ஆப்ரகாம் டீமுடன் காபி ஷாப்பில் ட்ரீட் வைத்து மகிழ்ந்துள்ளார் இலி.

அழிந்துவரும் தாவரங்கள்

‘‘கடந்த 300 ஆண்டுகளில் மட்டும் காடுகளில் இருந்த 600 வகையான தாவர இனங்கள் முற்றிலும் அழிந்துவிட்டன...’’ என்று அதிர்ச்சியளிக்கிறது
‘நேச்சர்’ இதழின் ஆய்வு.‘‘இதுபோக ஒரு மில்லியன் விலங்குகள் மற்றும் நூற்றுக்கணக்கான தாவர இனங்கள் அழிவின் விளிம்பில் உள்ளது...’’ என்கிறது அந்த ஆய்வு. ‘‘என்னென்ன விலங்குகள், பறவைகள் அழிந்துபோய்விட்டன என்று பல பேரால் சொல்ல முடியும்.

இதைப் பற்றிய நிறைய பதிவுகள் இருக்கின்றன. ஆனால், அழிந்துபோன தாவரங்கள் என்னென்ன என்பதைப் பற்றி சிலபேரால் மட்டுமே சொல்ல முடியும். ஏனென்றால் தாவரங்கள் பற்றிய சரியான தரவுகள் நம்மிடமில்லை மற்றும் அதைப்பற்றிய ஆராய்ச்சிகளும் குறைவு...’’ என்கின்றனர் நிபுணர்கள்.

விவாக பிராப்தம்

பக்தியில் தகதகக்கிறார் தமன்னா. குடும்பத்தினருடன் பொற்கோவிலுக்குப் பறந்து வந்திருக்கிறார். மகளுக்குச் சீக்கிரமே விவாக பிராப்தம் அமையட்டும் என அவரது பெற்றோர்கள் மனமுருகி பிரார்த்தனை செய்திருக்கிறார்கள். ஆனால், தம்ஸின் கவனம் இப்போது வெப்சீரீஸ் பக்கம் திரும்பியிருக்கிறது!

ஆல் இன் ஒன்

உங்களின் அனைத்து வகையான ஸ்டோரேஜ்களையும் திறக்கின்ற சாவி இந்த காம்போ கார்டு ரீடர். ‘ஆர்டிஎஸ்’ என்ற நிறுவனத் தயாரிப்பு இது.
பென் டிரைவ், போன் மெமரி கார்டு, கேமராவில் பயன்படுத்தப்படும் ஸ்டோரேஜ் கார்டு, ஹார்டு டிஸ்க்.எஸ்டி கார்டு என அனைத்தையும் பொருத்திக்கொள்ள போர்ட்டுகள் இருக்கின்றன. இந்த ரீடரை உங்களின் லேப்டாப் அல்லது டேப்லெட்டுடன் இணைத்துவிட்டால் போதும். பென் டிரைவ் ஓப்பன் ஆகவில்லையே என்ற கவலையே இருக்காது. இதன் விலை ரூ.394.

யூ டியூப் தாத்தா

இணைய உலகில் பிரபலமான பெயர் நாராயண ரெட்டி. தெலங்கானாவைச் சேர்ந்த இவர் ‘யூடியூப் தாத்தா’ என்று செல்லமாக அழைக்கப்பட்டார். இவரது ‘கிராண்ட்பா கிச்சன்’ என்ற சேனலுக்கு 60 லட்சம் சந்தாதாரர்கள். விதவிதமாக சமைத்து அசத்தும் இவரது வீடியோ பதிவுகளுக்கு உலகெங்கும் ரசிகர்கள்.

இந்த வீடியோக்கள் மூலம் ஈட்டும் வருமானத்தில் ஆதரவற்ற அனாதைக் குழந்தைகளுக்கு உணவளித்து வந்த நாராயண ரெட்டி கடந்த அக்டோபரில் இறந்துவிட்டார். இன்று அவரது குடும்பத்தினர் கிராண்டா கிச்சனை கையில் எடுத்து நாராயண ரெட்டியின் சேவையைத் தொடர ஆரம்பித்திருப்பது வைரலாகிவிட்டது.               

குங்குமம் டீம்