120 கோடி வயதான பாறைகளில் பாயும் நதி!



பூமியில் மிக அழகான இடங்களில் ஒன்று கானோ கிறிஸ்டல்ஸ் நதி. நூறு கிலோமீட்டர் நீளமுடையது. கொலம்பியாவில் பாயும் இந்த நதிக்குள் அழகழகான செடிகள் துளிர்க்கின்றன; பூக்கள் மலர்கின்றன.
அதனால் இந்த நதியில் பாய்கின்ற நீர் மஞ்சள், பச்சை, நீலம், சிவப்பு என பல வண்ணங்களில் காட்சியளிக்கிறது. கொலம்பியாவின் இயற்கை அதிசயம் என்றும் கொண்டாடப்படுகிறது.

கரடுமுரடான பாறைகளுக்கு உள்ளேயும் நடுவிலும் பாய்கின்ற இந்த நதியைக் காண்பதற்காக ஆயிரக்கணக்கானோர் தினமும் வருகைபுரிகின்றனர்.
நதி பாய்கின்ற பாறைகள் 1.2 பில்லியன் (120கோடி) வருடங்களுக்கு முந்தையவை என்று சமீபத்தில் தொல்லியலாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

‘‘மனிதராகப் பிறந்தவர்கள் இறப்பதற்கு முன் பார்க்க வேண்டிய 100 இடங்களில் இந்த நதியும் ஒன்று...’’ என்று புகழாரம்சூட்டியிருக்கிறது பிபிசி. குறிப்பாக நவம்பர், டிசம்பர் மாதங்களில் கானோ கிறிஸ்டல்ஸின் அழகைக் கண்டு ரசிக்க ஆயிரம் கண்கள் போதாது.                          

த.சக்திவேல்