சல்யூட்



‘Data Corner’ - முத்து முத்தான தகவல்களை புள்ளிவிபரமாக அள்ளித்தரும் அழகே அழகு. ‘இந்தியாவில் 4000 மனநல ஆய்வாளர்களே உள்ளனர்’ என்ற தகவல் ஓர் அதிர்ச்சி ரிப்போர்ட்.- நெல்லை குரலோன், பொட்டல்புதூர்; மியாவ்சின், கே.கே.நகர்; பப்பு, அசோக் நகர், கீதா, கோவில்பட்டி.

80’s ரீயூனியனுக்குப் பத்து வயசா? நம்ப முடியவில்லை. ஆண்டுதோறும் கொண்டாடி தங்களின் இளமையை மீட்டுக்கொள்ளும் வித்தை இது. சுஹாசினி கூறியதைப் படிக்கும்போது சுவாரஸ்யம் அள்ளியது.
- ஆர்.ஜெ.சி, சென்னை;  இலக்சித், மடிப்பாக்கம்; பிரேமா பாபு, சென்னை; சந்திரம்தி, சென்னை; கருணாகரன், போரூர்; நெல்லை குரலோன், பொட்டல்புதூர்; கதிரவன், மதுரை; ஆசை. மணிமாறன், திருவண்ணாமலை; ஆ.சீனிவாசன், எஸ்.வி.நகரம்.

‘தொல்(லைக்) காப்பியம்’ மினி பஸ்ஸின் பெருமைகளை கண் முன்பு கொண்டு வந்து நிறுத்தியது ரியலி சூப்பர்.- வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு; டி.எஸ்.தேவா, கதிர்வேடு; மனோகரன், மேட்டுப்பாளையம்; க.நஞ்சையன், பொள்ளாச்சி.மின்சாரத்தை அள்ளி வழங்கும் செயற்கை சூரியன். சபாஷ்... ஆறு சூரியனின் வெப்பத்தை மனிதனால் உருவாக்க முடியும் என்ற நம்பிக்கைக்கே ராயல் சல்யூட்.
-  ப.மூர்த்தி, பெங்களூரு;  பிரேமா குரு, சென்னை; ரா.புனிதவதி, பொள்ளாச்சி; நெல்லை குரலோன், பொட்டல்புதூர்;
வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு.

சொந்த நாட்டைச் சேர்ந்தவரின் குடியுரிமையை பறிக்கிற கொடுமையான என்ஆர்சி மசோதா மக்கள் மீது மோடி அரசு நடத்துகிற சர்ஜ்ஜிகல் ஸ்டிரைக் ஆகும்.
- இரா.வளையாபதி, தோட்டக்குறிச்சி; ஜெயசந்திரபாபு, மடிப்பாக்கம்; விஜயா மாதேஸ்வரன், தர்மபுரி; பிரேமா ராஜ்குமார், குன்னூர்; த.சத்தியநாராயணன், அயன்புரம்.

மனதை நெகிழச் செய்யும் நிகழ்வுப் பின்னல் இழையோடிய ‘நேச நெஞ்சம்’ சிறுகதையை வாசித்துணர்ந்த போது மாறுபட்ட அனுபவம் ஏற்பட்டது.
- பிரேமா, சென்னை; இலக்சித், மடிப்பாக்கம்; இராஜேஸ்வரி, போடிநாயக்கனூர்.

திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் எப்படி திருட்டை ஒழிக்க முடியாதோ அதுபோல குடிப்பவர்கள் திருந்தாவிட்டால் மதுவை ஒழிக்க முடியாது. இந்தியாவில் பூரண மதுவிலக்கு கொண்டுவருவது சாத்தியமல்ல என்பது சத்தியமான உண்மை.

- கலிவரதன், கீழ்க்கட்டளை;  கண்ணன், மதுரை; கருணாகரன், போரூர்; ஜெயராமன், கோவிலம்பாக்கம்; த.சத்தியநாராயணன், அயன்புரம்.

‘நான்...’ பகுதியில் தனது வளர்ச்சி பற்றி பேசியுள்ள பாடகர் மனோ, கொஞ்சமும் ‘நான்’ என்கிற உணர்வே மேலிடாமல் உருகித்தள்ளியுள்ளார்.
- சரண் சுதாகர், வேளச்சேரி; ஆசிகா, வியாசர்பாடி; செம்மொழி, சேலையூர்; முகம்மது உஸ்மான், மூலக்கடை; நிலவழகு, நீலாங்கரை; அமிர் பத்ரா, மடிப்பாக்கம்.

ரீடர்ஸ் வாய்ஸ்