ஷெர்னி



சமூகவலைத்தளங்களில் ஹிட் அடித்துக்கொண்டிருக்கும் இந்திப் படம் ‘ஷெர்னி’. ‘அமேசான் ப்ரைமி’ல் காணக்கிடைக்கிறது.புலிகள் நடமாட்டம் உள்ள ஒரு வனப்பகுதி. அதையொட்டிய கிராமத்தில் வாழும் மக்கள் கால்நடைகளை மேய்க்க அந்த வனத்துக்குத்தான் செல்ல வேண்டும். அப்படிச் செல்லும்போது மக்களும் கால்நடைகளும் புலியால் அடித்துக் கொல்லப்படுகின்றனர்.
அங்கே வனத்துறை அதிகாரியாக வித்யா. நேர்மையானவர். அவருக்கு புலியையும் காப்பாற்ற வேண்டும்; மக்களையும் பாதுகாக்க வேண்டும். இதற்கிடையில் சில அரசியல் பிரமுகர்கள் புலியைக் கொன்றுவிட திட்டமிடுகின்றனர். அதிகாரிகள் சிலரும் அதற்கு துணைபோகின்றனர். வித்யாவை திசை திருப்புவதற்கான  வேலைகளும் நடக்கிறது. இப்படியான சூழலில் வித்யா என்ன செய்தார்... புலிக்கு என்னவானது... என்பதே அரசியல் திரைக்கதை.

புலிகளின் மீதான கவனத்தையும் அதன் வாழ்க்கைக்கான உரிமையையும் கோரிக்கை போல் வைக்கிறது திரைக்கதை. ‘‘நீங்கள் 100 முறை காட்டுக்குள் சென்றால் ஒரு முறையாவது புலியைப் பார்த்து விடலாம். ஆனால், புலி உங்களை 99 முறையாவது பார்த்துவிடும்...’’ போன்ற வசனங்கள் அப்ளாஸை அள்ளுகின்றன. வனத்துறை அதிகாரியாகவே மனதில் பதிவாகிறார் வித்யா பாலன். படத்தின் இயக்குநர் அமித் மசூர்கர்.              

தொகுப்பு: த.சக்திவேல்