ஐஸ்கிரீம் வியாபாரம் to சப்-இன்ஸ்பெக்டர்!இன்று இந்தியா முழுவதும் டிரெண்ட் ஆகிக்கொண்டிருக்கும் ஒரு பெயர், ஆனி சிவா. கேரளாவின் அழகைப் பிரதிபலிக்கும் வர்க்கலாவில் உள்ள காவல் நிலையத்துக்கு புதிதாக நியமிக்கப்பட்டிருக்கும் சப்-இன்ஸ்பெக்டர் இவர்.  இதற்குப் பின்னால் இருக்கும் ஆனியின் கடும் முயற்சியும் மன உறுதியும்தான் அவர் டிரெண்டாக காரணம்.

18 வயதானபோது பெற்றோரை எதிர்த்து காதல் திருமணம் செய்துகொண்டார் ஆனி. குழந்தை பிறந்த சில மாதங்களில் காதல் கணவன் கைவிட, நிலைகுலைந்துபோனார். பெற்றோரிடமும் அவரால் செல்ல முடியவில்லை. குழந்தையை வளர்ப்பதற்காக வர்க்கலாவில் ஐஸ்கிரீமும், குளிர் பானங்களும் விற்றார். தவிர, கிடைக்கிற வேலைகளை எல்லாம் பார்த்துக்கொண்டே படித்தும் வந்தார். எந்த சூழலிலும் அவர் யாருடைய உதவியையும் நாடவில்லை. பத்து வருடங்களுக்கு முன்பு எந்த இடத்தில் ஐஸ்கிரீம் விற்றாரோ அதே இடத்துக்கு இப்போது சப்-இன்ஸ்பெக்டராக வந்திருக்கிறார் ஆனி. இவரது கதை வைரலாகிவிட்டது.

த.சக்திவேல்