வலைப்பேச்சு



@ptcv_ - கொரோனா காலத்தில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கென்று சலுகை அறிவிச்ச ஒரே ஒன்றியம் நம்ம ஒன்றியம்தான் ...

@Surya_BornToWin - ‘தடுப்பூசி விபரங்களை பொதுவெளியில் வெளியிடக் கூடாது’ என்று   மாநில அரசுகளுக்கு கடுமையான உத்திரவு போடுகிறது ஒன்றிய பாஜக அரசு!
‘தடுப்பூசி விவரங்களை வெள்ளை அறிக்கையாக அரசு கண்டிப்பாக வெளியிட வேண்டும்’ என்று தமிழ்நாடு பாஜக தலைவர் முருகன் சொல்கிறார்!  பாஜக பரிதாபங்கள்

@manipmp - ‘இந்தா இதை உங்க வீட்டு பரண் மேல பத்திரமா வச்சிடு’னு சொல்லுவது போலவே பீங்கான் பிளேட்டுகளை பரிசாகக் கொடுக்கின்றனர்.

@ItsJokker - லிட்டர் பெட்ரோல் ரூ.100 ஐத் தாண்டிவிட்டது... முதல்வர் என்ன செய்யப் போகிறார் - வானதி கேள்வி சங்கீஸ் - அப்பாடா, முன்னாடி பழிபோட நேரு இருந்தார்... இப்ப பழி சொல்ல CM இருக்கார்..!

@twittornewton - ஒரு மனுஷனை நல்லவன்னு சொல்றதுக்கு ‘அவருக்கு கடவுள் பக்தி நிறைய உண்டு’ என்பதை ஒரு qualification ஆகச்  சொல்லாதீங்கப்பா!

@thoatta - விடியற்காலை 3 மணிக்கு ‘குட்மார்னிங் பாஸு’ன்னு சொல்றப்பவே, நீ யாருன்னு எனக்கு தெரியும், நான் யாருன்னு உனக்கு
தெரியும்...

@Anandh_Offl - மனைவி எதுக்கெடுத்தாலும் குழந்தைய திட்றானா வீட்ல சூழ்நிலை சரியில்லைனு அர்த்தம்; மனைவி நேரடியாவே கணவனை திட்ட ஆரம்பிச்சிட்டானா நிலைமை  இயல்பு
நிலைக்கு வந்திட்டுதுனு அர்த்தம்!

@PeterAlphonse7 - ஆட்சிமாற்றத்தின் அற்புதம் பாரீர்!
கொரோனா முன்களப் பணியாளருக்கான  பாதுகாப்பு கவச உடை... எடப்பாடியார் அரசுக்கு அனிதா டெக்ஸ்காட் கம்பெனி விற்ற விலை ₹330. அதே நிறுவனம் தளபதியார் அரசுக்கு விற்க முன்வரும் விலை ₹130. ஒரு உடையில் ₹200 கமிஷனா? இவர்களை சும்மாவிடலாமா?

@Kozhiyaar - கொரோனாவினால் கல்யாணத்துக்கு போக முடியலை, கருமாதிக்கு போக முடியலைன்னு கூட வருத்தமா இல்லை... ஆனா, கிடாய் விருந்துக்கு போக முடியலைங்கிறதுதான் மனசை தீயா சுடுது!

@Mr_vandu - ஒரே மாதிரி உலகத்துல ஏழு பேர் இருப்பாங்களாம். நம்ம நிலமையே மோசமாயிருக்கு. மிச்ச ஆறு பேரு எந்த நாட்ல எந்த தெருவுல
பிச்சை எடுத்துட்டு இருக்காங்களோ..

@mpgiri - சலூன் கடை shareலாம் வாங்கும் காலம் எப்ப வருமோ... என்னா கூட்டம்... என்னா கூட்டம்...

@sultan_Twitz - தமிழக சட்டசபையில் ‘பாரத் மாதா கி ஜெய்’ முழக்கத்தை எழுப்புவோம் - எல்.முருகன்.
பெட்ரோல் விலை ரூ.100ஐத் தாண்டி போயிட்டு இருக்கு... மொதல்ல அதை எதிர்த்து குரல் குடு...

@Bharathi Nathan - ‘ட்ரோன் மூலமாக ராணுவத்தின் மீது தீவிரவாதிகள் தாக்குதல்’னு நியூஸ் வந்திருக்கு. உத்திரப்பிரதேச தேர்தல் வருதுல்ல. அது முடியிற வரைக்கும் இனிமே இதே வேலையாத்தான் இருப்பாங்க. நான் தீவிரவாதிங்களைச் சொன்னேன்.

@sultan_Twitz - நான் தமிழ் மொழியின் பெரிய அபிமானி - பிரதமர் மோடி.
ஒவ்வொரு தடவையும் தமிழ் மொழி மேல இப்படி பாசத்தைப் பொழியுறப்ப அடுத்து என்ன செய்யப் போறீங்களோனு நெஞ்சு படக்குன்னு அடிச்சிக்குது...

@teakkadai1 -
ஒன்றிய அரசோட கொள்கை என்னன்னா தனியார் ஒரு தொழிலைச் செய்யலாம். ஆனால், மாநில அரசுகள் செய்யக்கூடாது. பெட்ரோலியம் ரிஃபைனரி, செல்போன் சேவை, ரயிலைக் கூட வாடகைக்கு விடுறாங்க. ஆனா, மாநில அரசுகளை இதெல்லாம் செய்ய விடுறது இல்ல. இத மாத்தினா collective intelligence அதிகம் உள்ள மாநிலங்கள் விரைவா முன்னேறும். ஒன்றிய அரசு பாதுகாப்பு, வெளி விவகாரம், மாநிலங்களுக்கு இடையேயான பிரச்னைகள்னு இவற்றில் மட்டும் கவனம் செலுத்தி அந்தக்கால பேரரசுகள் கப்பம் வசூலிப்பது போல மாநிலங்களிடமிருந்து ஆண்டுக்கு இவ்வளவு என வசூலித்துக் கொள்ளலாம். மாநிலங்களுக்கு இடையே ஆரோக்கியமான போட்டியும் இருக்கும்.

@இரா. முருகவேள் - அதிகாலையின் மெல்லிய கூதல் காற்றோடு மாநகராட்சி ஊழியர் அந்த வீட்டின் வாயிலில் தோன்றினார்.
மா.ஊ: அண்ணா  சீக்கிரமா burial ground  போங்க.
வீட்டு நபர் கண்ணுக்குத் தெரியாத ஆயுதத்தால் தாக்கப் பட்டது போல பதறிப் போனார்.
நபர்:  நீங்கள் யார்? இப்பவே ஏன் போகணும்?  பாசக் கயிறு ஏதாச்சும் கொண்டு வந்து இருக்கீங்களா?
மா. ஊ: மாநகராட்சி கயிறு எல்லாம் கொடுக்காது அண்ணா. நீங்கள் burial ground  போய் தடுப்பூசி போட்டுக்குங்க.
தடுப்பூசி... Burial ground...
அடேய் அந்த இடத்துக்கு பெயர் ‘சாஸ்திரி மைதானம்’. இன்னமும் அம்பது  வருஷத்துக்கு முன்னால இருந்த பெயரைச் சொல்றீங்க. பயமா இருக்குல்ல!

@prasannaR_ - எங்கள் பகுதியில் நடக்கும் பராமரிப்புப் பணிகள். துருப்பிடித்த பழைய மின்கம்பிகளை மாற்றி விட்டு புதுக்கம்பிகள் பொருத்து
கிறார்கள். தமிழ்நாடு முழுவதுமே இப்பணிகள் நடைபெறலாம் என்பது என் ஊகம். ஐயோ மின்வெட்டு அராஜகம் என்று கூச்சலிடுவோர்க்கு இருப்பது காழ்ப்பு மட்டுமே என்று தோன்றுகிறது.

@itz_idhayavan - தமிழ் சினிமாவில் மாட்டு வண்டிகளின் ப்ராண்ட் அம்பாஸிடர் பாரதிராஜா!

@LAKSHMANAN_KL - என்னது... பெட்ரோல் ‘செஞ்சுரி’ அடிச்சதுக்கு ‘ஜீ’க்கு ‘மேன் ஆஃப் தி மேட்ச்’ அவார்டு கொடுக்கணுமா?!

@amuduarattai - தேங்காய் எண்ணெய் என்பது முடி இருப்பவர்கள் தேய்ப்பது, ஹேர் ஆயில் என்பது முடி இழந்தவர்கள் தேய்ப்பது என அறிக.

@Vinayaga Murugan - நான் ஏன் இந்த இயற்கை விவசாய ஆட்களை கிண்டல் செய்றேனா... இதான். ஆறேழு வருடங்கள் முன்பு ஐடி வேலையை விட்டுட்டு ஆர்கானிக் விவசாயம் செய்யப்போறேன்னு ஒரு நண்பர் போனார். நான் கொஞ்சம் ஏமாந்திருந்தால் என்னையும் வேலையை விடவைத்து அதில் கோர்த்துவிட்டிருப்பார். திருவள்ளூர் தாண்டி செம்மண் நிலம் வாங்கிப்போட்டு ஆர்கானிக் விவசாயத்துடன் கூடவே பரண்மேல ஆட்டுப்பண்ணை வைத்தார். பரண்மேல ஆட்டுப்பண்ணை வைப்பதால் தினமும் கூட்டிப் பெருக்க வேண்டாம். வாரம் ஒருமுறை கூட்டலாம். ஆடுகளும் வரிசையாக ஐடி கம்பெனிபோல அதனதன் கேபினில் உட்கார்ந்திருக்கும். வேலைப்பளு இல்லை என்று ஏழு லட்சம் செலவு செய்து பரண்போட்டார்.

பக்கத்தில் அரை ஏக்கருக்கு வேலிமசால் போட்டார். இரண்டு  வருடம் கழித்து ஆர்கானிக் முறையில் லாபம் இல்லை. பூச்சி நிறைய வருதுன்னு ஆர்கானிக்கை கைவிட்டு சாதாரண விவசாயத்துக்கு மாறினார். காலை போன் செய்து விசாரித்ததில் கோவிட்டுக்குப் பிறகு ஆட்கள் வேலைக்கு வரமாட்டேங்கிறாங்க. நானே எல்லா வேலையும் செய்யவேண்டி இருக்கு. மனைவி, பிள்ளைகளைக் கூப்பிட்டால் உதவிக்கு வரமாட்டேங்கிறாங்க. இதுக்கு பேசாம ஐடி வேலையியிலேயே இருந்திருக்கலாம் என்று புலம்புறார்.

என்னங்க செய்றது? நாம வளர்க்குற ஆடு, மாடு எல்லாம் அதுங்களே ஓரமா போய் சாணியைப் போட்டுட்டு அதுங்களே தண்ணியை ஊற்றி குளிச்சு சுத்தமா பால்கறந்துட்டு வேளைக்கு தீவனம் சாப்பிட்டு மாசமானா அதுங்களே இறைச்சிக்கடைக்கு போய் வெட்டுவாங்கிட்டு நம்ம கூகிள் பேவுக்கு பணத்தை மட்டும் அனுப்பி வச்சா நல்லாத்தான் இருக்கும். ஆனா, இயற்கை அப்படி படைக்கலையேன்னு சொன்னேன்.

@Ramanujam Govindan - ஆங்கிலத்தை மனம்போன போக்கில் Idiosyncratic ஆகப் புரிந்துகொள்பவர்கள் நாம். என்னையும் சேர்த்துத்தான். Idiosyncratic - ஒவ்வொருவருக்குத் தக்கமாதிரி- இதை நான் சரியாகத்தான் புரிஞ்சிருக்கேனா?இன்று ஒருவர் டீக்கடையில் சொன்னது-‘அரசியலே ரொம்ப மோசம். ஒரே பாலிடிக்ஸாக இருக்கு’ என்றார். அவரைப் பொறுத்தவரை ‘அரசியல்’ நல்ல வார்த்தை. ‘பாலிட்டிக்ஸ்’ மோசமான அரசியல். வாழ்க அவர் தமிழ்ப்பற்று!

@VeerasekarElan1 - உங்கள விட்டு போனவங்க மறுபடி உங்ககிட்ட வந்து பேசுனா வேற எங்கையோ செருப்படி வாங்கிருக்காங்கன்னு அர்த்தம்..!

@drkvm - மின்துறையில் ‘இழப்பு’தான்; ஊழல் இல்லை... - முன்னாள் அமைச்சர் தங்கமணி.
பூவை... ‘பூ’ன்னும் சொல்லலாம்... ‘புயிப்பம்’ன்னும் சொல்லலாம்...

@kumarfaculty - இந்த வாகனத்திற்கு என்று தனியாக திருஷ்டி பொம்மை, கயிறு தேவைப்படாதுதானே?

@அ. பாரி - பள்ளியில் இருந்து குழந்தைகளை அழைத்து வர தனது ஆக்டிவாவில் அம்மணி சென்றார். நானும் மேற்பார்வைக்கு என் யூனிகானில் சென்றிருந்தேன்.
பையன் புது வண்டியில்தான் ஏறுவேன் என ஆக்டிவாவில் ஏறிக்கொண்டான். மகள் என்னோடு. அம்மணி வண்டியை எடுத்தார்... நானும் பேரலலா பாதுகாப்பாக வந்து கொண்டிருந்தேன்.
திருப்பம் ஒன்றில் சட்டென நிறுத்தியவர், ‘ஒண்ணு முன்னாடி போ, இல்ல பின்னாடி வா... கூடவே ஒட்டிக்கிட்டு வந்தா நான் எப்படி ஓட்டுறது, பாரு உன்னாலதான் வண்டி ஆஃப் ஆயிடுச்சு’ என்றார்.

இந்த அறச்சீற்றத்தை சற்றே லாங் ஷாட்டில் பார்த்த பொது ஜனம் ஒருவர், ‘லேடிஸ்கிட்ட வம்பிழுக்கிறான் போல’ என்பதான பார்வை ஒன்றை என்னை நோக்கி வீசினார். தொடர்ந்து , ‘தாய்க்குலத்திற்கு ஒண்ணுன்னா’ என களம் காணுவதற்கான அறிகுறி களையும் அவரின் உடல்மொழி காட்ட, நானும் இது என்ர அம்மணிதான் என்பதைக் காட்டும் விதமாக பதிலுக்கு ஓர் உடல்மொழியைக் காட்டி அவரின் ஷோல்டரை சமநிலைக்குக் கொண்டு வந்தேன்.

ஏன்யா, நடு ரோட்டுல ஒருத்தனை, அதுவும் சாதுவான ஒருத்தனை ஒரு பொண்ணு இவ்வளோ போல்டா திட்டும்போதே யோசிச்சிருக்கணும்... சரி அதை விடு, அந்தத் திட்டை வாங்கிக் கொண்டு மானங்கெட்டதனமா சிரிச்சிக்கிட்டே கூடவே  நிக்கிறானே எனும்போதாவது யோசிச்சிருக்கணுமா இல்லையா... இதுக புருஷன் பொண்டாட்டின்னு..!