Data Corner



*2019ம் ஆண்டில், பொது சுகாதாரத் துறை பெரும்பான்மையான கருத்தடை சாதனங்களை வழங்கியுள்ளது. 3.5 மில்லியன் கருத்தடைகள்; 5.7 மில்லியன் கருப்பை கருத்தடை சாதனங்கள்; 1.8 மில்லியன் ஊசி மூலம் கருத்தடை மருந்துகள்; 410 மில்லியன் சுழற்சி வாய்வழி கருத்தடை மாத்திரைகள்; 2.5 மில்லியன் அவசர கருத்தடை மாத்திரைகள்; 322 மில்லியன் ஆணுறைகள்.

*2020ல் மட்டும் இந்தியாவில் வேலையின்மை 7.11% ஆக அதிகரிப்பு என சர்வதேச தொழிளாலர் அமைப்பின் ILO ஆய்வில் தகவல்.

*இந்தியாவில் 5 வயதுக்குட்பட்ட இறப்புகளில் 68% வரை தாய் மற்றும் குழந்தை ஊட்டச்சத்து குறைபாடு காரணமாக நிகழ்கிறது.

*27,57,000 பேர், கடந்த நிதி ஆண்டில் ரயில்களில் டிக்கெட் எடுக்காமல் பயணித்துள்ளனர். அவர்களிடமிருந்து ரூ.143 கோடி 82 லட்சம் அபராதம் வசூல்.

*97% இந்தியர்கள் கொரோனாவிற்குப் பின் ஏழ்மைக்கு தள்ளப்படுகின்றனர்.

*ஆயுள் காப்பீட்டு நிறுவனங்களின் புதிய பிரீமியம் வருவாய் (முதலாமாண்டு பிரீமியம்) நடப்பாண்டு மே மாதத்தில் ரூ.12,976.99 கோடியாக இருந்தது. இது, இத்துறையில் ஈடுபட்டுள்ள 24 நிறுவனங்கள் கடந்த 2020 மே மாதத்தில் ஈட்டிய புதிய பிரீமியமான ரூ.13,739 கோடியுடன் ஒப்பிடும்போது 5.6% குறைவாகும்.

*பாதுகாப்பற்ற உணவால் 200 வகை நோய் ஏற்படும். 10 பேரில் ஒருவர், அவ்வாறு பாதிக்கப் படுகின்றனர். அந்த வகையில், ஆண்டுக்கு 4.2 லட்சம் பேர்
மரணிக்கின்றனர்.

சுடர்க்கொடி