அந்த விஷயத்தில் இந்திய பெண்கள்தான் கில்லாடி!



அதிர்ச்சியடைய வேண்டாம். உண்மை இதுதான்.இதைச் சொல்வது ஊர் பெயர் தெரியாத யாரோ அல்ல. National Family Health Survey - தேசிய குடும்ப சுகாதார கருத்துக் கணிப்பு.
இந்த கணிப்பில்தான் இந்தியாவில் 11 மாநிலங்களில் ஆண்களை விட பெண்களுக்கு அதிகமான செக்ஸ் பார்ட்னர்கள் இருக்கிறார்கள் என்று தெரிய வந்துள்ளது.
கேட்க கொஞ்சம் அதிர்ச்சியாகவும் ஆச்சரியமாகவும் இருக்கும். ஆனால், அப்படித்தான் என்று அடித்துச் சொல்கிறது இந்த சர்வே.

2019 முதல் 2021 வரை இந்தியா முழுவதிலும் 707 மாவட்டங்களில் இந்தக் கருத்துக் கணிப்பை எடுத்திருக்கிறார்கள். இதில் ஒரு லட்சம் ஆண்களும் 1.1 லட்சம் பெண்களும் பங்கு பெற்றிருக்கிறார்கள். நகர்ப்புறம், கிராமப்புறம் என அனைத்துப் பகுதிகளிலும் அனைத்து வர்க்கத்தினரிடமும் இந்த கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டிருக்கிறது.

இந்தப் புள்ளிவிவரம், எத்தனை பேருடன் உறவு கொள்கிறார்கள் என்பதற்காக எடுக்கப்பட்ட கருத்துக் கணிப்பு அல்ல. பாதுகாப்பான உடலுறவை மேற்கொள்கிறார்களா... ஆணுறைகள் பயன்படுத்தப்படுகிறதா... கருத்தடை சாதனங்களை பயன்படுத்துகிறார்களா... போன்ற கேள்விகளுடன் அணுகப்பட்ட கருத்துக் கணிப்பு இது.

இதில்தான் எத்தனை பேருடன் உறவு கொள்கிறார்கள் என்ற விவரம் கிடைத்திருக்கிறது.இந்தியாவிலேயே ராஜஸ்தானில்தான் பெண்கள் அதிகமான ஆண்களுடன் செக்ஸ் உறவு வைத்திருக்கிறார்கள். அவர்களின் வாழ்நாளில் குறைந்தது 3 பேருடன் உறவு கொள்கிறார்கள் என்கிறது இந்தக் கருத்துக் கணிப்பு. 3.1 என்பது ராஜஸ்தான் பெண்களின் சராசரி அளவாக உள்ளது.

அதற்கு அடுத்த இடத்தில் இருப்பது மத்தியப் பிரதேசம். இங்கு பெண்களின் செக்ஸ் பார்ட்னர்களின் எண்ணிக்கை 2.5 என்ற சராசரியில் இருக்கிறது.மூன்றாவது இடத்தில் இருப்பது நம்ம தமிழ் நாடு. இங்கு பெண்கள் சராசரியாக 2.4 பேருடன் உறவு கொள்கிறார்கள் என்கிறது இந்த கருத்துக் கணிப்பு.

இதற்கு அடுத்து உத்திரப் பிரதேசம், அசாம், சத்தீஸ்கர், தெலங்கானா, மேகாலயா என்று பட்டியல் நீளுகிறது. இதில் ஆச்சர்யமளிக்கும் விஷயம், கோவா, மணிப்பூர், மேற்கு வங்காளம், திரிபுரா ஆகிய நான்கு மாநிலங்களில்தான் ஒருவர் என்ற சராசரி இருக்கிறது. மற்ற எல்லா மாநிலங்களிலும் ஒன்றுக்கு மேற்பட்டவர்களுடன் உறவு என்ற எண்ணிக்கைதான் இருக்கிறது.
ஆண்கள் பக்கம் வந்தால், மேகாலயாவில்தான் அதிகமான பெண்களுடன் உறவு கொள்ளும் ஆண்கள் அதிகமாக இருக்கிறார்கள். அங்கு ஓர் ஆண் தன் வாழ்நாளில் சராசரியாக 9.6 பெண்களுடன் உறவு கொள்கிறான் என்று தெரிய வந்துள்ளது.

தமிழ்நாட்டு ஆண்களின் சராசரி 1.8 என்று குறைவாக உள்ளது. தமிழ்நாட்டுப் பெண்களை விட ஆண்கள் சராசரி குறைவு என்பது கவனிக்கத்தக்கது.கிராமப்புறங்களில் பெண்கள் அதிக ஆண்களுடன் உறவு வைத்திருப்பதும் இந்தப் புள்ளிவிவரத்தில் தெரிய வந்துள்ளது. நகர்ப்புறப் பெண்களின் சராசரியை (1.4) விட கிராமப்புறப் பெண்களின் சராசரி (1.8) சற்று அதிகமாக இருக்கிறது.

இந்தக் கருத்துக் கணிப்பு சந்தேகங்களையும் கிளப்பியிருக்கிறது. பெண்கள் இத்தனை வெளிப்படையாகச் சொல்லியிருப்பார்களா என்ற கேள்வி எழுப்பப்படுகிறது. அதேபோல் ஆண்களும் உண்மையைச் சொல்லியிருப்பார்களா என்ற ஐயம் எழுந்துள்ளது. பல ஆண்கள் தங்கள் செக்ஸ் உறவுகளை மிகைப்படுத்தித்தான் சொல்லுவார்கள். அப்படிப் பார்க்கையில் இந்த எண்ணிக்கை குறைவாக இருக்கிறதே என்றும் கூறப்படுகிறது.கண்டவர் விண்டதில்லை... விண்டவர் கண்டதில்லை.
                   
காம்ஸ் பாப்பா