கரப்பான்பூச்சி காதல்இன்னும் சில நாட்களில் வரப்போகிற காதலர் தினத்துக்காக கனடாவில் உள்ள டொரோண்டா உயிரியல் பூங்கா ஒரு விசித்திரமான திட்டத்தை அறிவித்துள்ளது. இதைப் பற்றித்தான் டுவிட்டரில் ஹாட் டாக் போய்க் கொண்டிருக்கிறது. அங்கு வாழ்ந்து வரும் கரப்பான்பூச்சிகளுக்கு உங்களுக்குப் பிடிக்காத முன்னாள் காதலர் அல்லது காதலி, முதலாளி மற்றும் உறவினர்களின் பெயரைச் சூட்டிக்கொள்ளலாம் என்பதே அந்த விசித்திரமான திட்டம்.

இதற்காக 25 கனடா டாலரைக் கட்டணமாக செலுத்த வேண்டும். அதாவது இந்திய மதிப்பில் ரூ.1507. இதற்கு வரிச்சலுகையும் உண்டு என்பது குறிப்பிடத்தக்கது. டொரோண்டா உயிரியல் பூங்காவின் இணையதளத்தில் கரப்பான்பூச்சிக்குப் பெயர் வைப்பதற்காகவே பிரத்யேகமாக ஒரு ஆன்லைன் படிவத்தை வைத்துள்ளனர். அதை பூர்த்தி செய்து கட்டணத்தைச் செலுத்திவிட்டால் போதும். உங்களுக்குப் பிடிக்காத நபர்களின் பெயரைக் கரப்பான்பூச்சிக்கு சூட்டிவிட்டது தொடர்பாக ஒரு சான்றிதழைத் தருவார்கள். இந்த திட்டம் காதலர் தினம் வரைக்குமே.

த.சக்திவேல்