நாய்களைத் தத்துக்கொடுக்கும் பாதிரியார்
பிரேசிலில் வெளியாகும் எந்தப் பத்திரிகையைத் திறந்தாலும், அதில் அடிபடக்கூடிய ஒரு பெயர், பாதிரியார் கோம்ஸ். அப்படி அவர் என்ன செய்துவிட்டார் என்கிறீர்களா? வாரத்தில் ஏதாவது ஒரு நாளில், கைவிடப்பட்ட தெரு நாய்களைத் தேடி பயணம் மேற்கொள்வார் கோம்ஸ். இந்த தேடலில் கிடைக்கும் நாய்களைத் தனது இருப்பிடத்துக்குக் கொண்டு வருவார். அதை குளிப்பாட்டி, உணவு கொடுத்து பராமரிப்பார்.
 அவர் பாதிரியாராக இருக்கும் தேவாலயத்தில் சபை கூடும் நாளன்று அந்த நாய்களில் ஒன்றை சபைக்கு அழைத்து வருவார். சபைக்கு வருகை புரிந்தவர்களிடம் அந்த நாயை அறிமுகம் செய்வார். விருப்பப்பட்டவர்கள் நாயைத் தத்தெடுத்து, பராமரிக்கலாம் என்று கோரிக்கை வைப்பார். சபைக்கு வந்தவர்களில் யாரோ ஒருவர் அந்த நாயைத் தத்தெடுத்து தன் வீட்டுக்கு அழைத்துச் சென்றுவிடுவார். இப்படி, கைவிடப்பட்டு தெருவில் கிடந்த 12 நாய்களை தத்துக் கொடுத்திருக்கிறார் கோம்ஸ். தேவாலயத்தில் நாய்களைத் தத்துக்கொடுக்கும் நிகழ்வு நடப்பது இதுவே உலகில் முதல் முறை.
த.சக்திவேல்
|