கேமராவுக்குப் பின்னால் பெண்கள்!
டேட்டா ஆய்வுகள் சொல்லும் வளர்ச்சியும், வழிகளும்!
பெண்கள் கடந்த பத்து வருடங்களாகவே எல்லா துறைகளிலும் மிக அற்புதமான வளர்ச்சியை அடைந்து வருகின்றனர். குறிப்பாக நடிப்பு மட்டுமே பெண்களுக்கு என்றிருந்த நிலை மாறி இன்று சினிமா தொழில்நுட்பத் துறையிலும் உறுதியான முன்னேற்றம் தெரிகிறது. எனினும் சினிமாவில் சில தொழில்நுட்பத் துறைகளில் இன்னும் கடுமையான இடைவெளி காணப்படுகிறது.
 எந்தெந்த துறைகளில் எவ்வளவு விகிதம் வளர்ச்சி, எந்தெந்த துறையில் இன்னும் கவனம் தேவை, பெண்கள் மற்றும் பெண் சார்ந்த தொழில் வளர்ச்சி குழுக்கள் என்ன செய்ய வேண்டும்? டேட்டா ஆய்வுகள் கொடுக்கும் உண்மை நிலவரம் என்ன?
சினிமாவில் வளர்ச்சிப் பாதையில் பெண்கள் அதிகரித்து வரும் துறைகள்:
எடிட்டிங் (Editing):
கடந்த சில ஆண்டுகளில் பெண்கள் எடிட்டிங் துறையில் குறிப்பிட்ட வளர்ச்சியில் சென்று கொண்டிருக்கிறார்கள். ஆர்த்தி பஜாஜ், நம்ரதா ராவ், தீபா பாதியா, ஆண்ட்ரியா, ஸ்னேகா நாயர் போன்ற பெண்கள் முன்னணி எடிட்டர்களாக இருக்கின்றனர்.
 ஆடைகள் வடிவமைப்பு (Costume Design):
இந்த துறையில் பெரும்பாலும் பெண்களே ஆட்சி செலுத்துகிறார்கள். நீதா லுல்லா, ஏகா லகானி, பவித்ரா, அனு வர்தன், அனு பார்த்தசாரதி, மற்றும் நல்வினா ஸ்டைல் போன்றோர் பல வெற்றிப் படங்களில் பணியாற்றி வருகின்றனர்.
 மேக்கப் & ஹேர்ஸ்டைலிங்:
இந்தத் துறையிலும் சந்த்யா சேகர், லேகா குப்தா, மேகாஹ் ஓபராய், ஆர்த்தி நாயர் என பல பெண்கள் கோலோச்சி வருகிறார்கள். மேலும் நடிகைகள் மட்டுமின்றி நடிகர்கள் பலரும் கூட பெண் மேக்கப் மற்றும் ஹேர் ஸ்டைலிங்கை நாடுவது சமீப காலமாக பெருகி வருகிறது.
 எழுத்து (Writing Story/Screenplay/Dialogues):
பெண்கள் கதை, திரைக்கதை, வசனம் போன்ற துறைகளிலும் மெதுவாக ஆனால் நிலையான வளர்ச்சி காண முடிகிறது. சுதா கொங்கரா, கௌரி ஷிண்டே, ரேவதி போன்றோர் சினிமா எழுத்துத் துறையிலும் அருமையான படிக்கட்டுகளை அமைத்து வருகிறார்கள்.
கன்யா ராமன், தமயந்தி, லட்சுமி சரவணகுமார், ஹலிதா ஷமீம், பவானி ரவீந்திரன், அஞ்சலி மேனன் மற்றும் புதிய தலைமுறை எழுத்தாளர்களாக அருணா கவிதா, மஞ்சரி உள்ளிட்டோரும் அடக்கம். மொழியாக்கம் (Translation / Sub-titles)
இதில் பல படித்த பல மொழியறிவு உடைய பெண்களே பணிபுரிகிறார்கள். ஏனெனில் இது வீட்டிலிருந்து செய்து கொடுக்கும் பணி என்பதால் படித்த பல ஹவுஸ்ஒயிஃப்கள் குழு இதனை ஒரு கார்ப்பரேட் ஸ்டைல் வேலையாகவே செய்து கொடுக்கின்றனர்.
பெண்கள் அதிகரித்து வரும் தொழில்நுட்பத் துறைகள்
(விகிதாச்சார அடிப்படையில்):
துறை பெண்கள் பங்கேற்பு (ஏறத்தாழ விகிதம்) வளர்ச்சி நிலை திரைக்கதை / வசன எழுத்து 20% - 30% அதிகரித்து வருகிறது திரைப்பட இயக்கம் 10% - 15% மெதுவான வளர்ச்சி தொலைக்காட்சி / OTTகள இயக்கம் 30% - 40% விரைவான வளர்ச்சி எடிட்டிங் / தொகுப்பு (Editing) 15% - 20% முன்நிலை மாற்றம் ஒலி வடிவமைப்பு (Sound Design) 5% - 10% குறைவான பங்கேற்பு ஒளிப்பதிவு (Cinematography) 3% - 5% மெதுவான வளர்ச்சி ஆடை வடிவமைப்பு / காஸ்ட்யூம் 60% - 70% பெண் மேலாதிக்கம் ஒப்பனை / மேக்-அப் 40% - 50% நிலையாக உள்ளது அனிமேஷன் / VFX / கிராஃபிக்ஸ் 10% - 15% அதிகரித்து வருகிறது நிர்வாக தயாரிப்பு / லைன் புரொடியூசிங் 20% - 25% வளர்ச்சி நிலை
முக்கிய முன்னேற்றங்கள்:
* OTT தளங்களில் (Netflix, Amazon, Zee5, etc.) பெண்கள் இயக்குநர்கள் மற்றும் எழுத்தாளர்களின் பங்கு கடந்த 5 ஆண்டுகளில் தொடர்ச்சியாக அதிகரித்து வருகிறது.
* திரைப்பட விழாக்கள் மற்றும் விருது நிகழ்வுகளில் பெண் தொழிலாளர்கள் அதிகமாக பாராட்டப்படுகிறார்கள்.
* Film Companion, Galatta Plus, FICCI-EY Report (2023) போன்ற ஆய்வுகளும் இதை உறுதிப்படுத்துகின்றன.
சினிமா தொழில் நுட்பத் துறையில் பெண்கள் குறைவாக இருக்கும் துறைகள்:
1. ஒளிப்பதிவு (Cinematography):
இது மிகவும் ஆண்கள் ஆளுமையிலான துறையாகவே தொடர்கிறது. இந்திய அளவில் சில பெண் ஒளிப்பதிவாளர்கள் (ex: பிரவீணா, பல்லவி ராதாகிருஷ்ணன்) இருந்தாலும், இன்னும் இது சவாலான துறையாகவே இருக்கிறது.
2. இயக்கம் (Direction):
பெண்கள் தற்போது இயக்கம் பக்கம் வருகிறார்கள் என்றாலும், அந்த எண்ணிக்கை மிகவும் குறைவாகவே உள்ளது. பெண் இயக்குநர்கள் வெறும் சிலரே. கீதா மோகன்தாஸ், ரேவதி, காயத்ரி (புஷ்கர்-காயத்ரி), சுதா கொங்கரா, நந்தினி ரெட்டி இன்னும் பலர் இருப்பினும் இதில் அதிக முன்னேற்றம் தேவை.
3. ஒலி வடிவமைப்பு (Sound Design):
இந்த துறையில் பெண்களின் பங்கேற்பு மிக மிகக் குறைவு. காரணம் தொழில்நுட்ப அறிவு, வாய்ப்புக்குறைவு, மற்றும் வேலை நேர கட்டுப்பாடுகள். குறிப்பாக இதில் இரவு நேர பணிக்ள் அதிகம்.
4. VFX & Animation Supervision:
இது கூட ஆண்கள் ஆளுமைதுறையாகவே இருந்து வருகிறது. ஆனால், குறிப்பிட்ட கம்பெனிகளில் backend VFX work-இல் பெண்கள் அதிகம் உள்ளனர். எனினும் டீம் லீட் , சூப்பர்வைசர் பட்டியல்களில் பெண்கள் ஆளுமை குறைவே.
சினிமாவில் பெண்கள் குறைவாக உள்ள தொழில்நுட்பத் துறைகள் (விகிதாச்சார அடிப்படையில்):
தொழில்நுட்ப துறை பெண்கள் பங்கேற்பு (சராசரி சதவீதம்) நிலைமை / காரணங்கள் ஒளிப்பதிவு (Cinematography) < 5% உடல் உழைப்பு, இரவு வேலை நேரம், இடஒதுக்கீட்டு பஞ்சம் இயக்கம் (Direction) < 10% வாய்ப்பு குறைவு, நம்பிக்கை இல்லாத சூழல் ஒலி வடிவமைப்பு (Sound Design) < 5% தொழில்நுட்ப விளக்கம், பயிற்சி இல்லாத நிலை VFX / Animation Supervision < 10% பின்னணி வேலையில் பெண்கள் இருந்தாலும், மேல் நிலை அதிகாரிகள் சிலரே Choreography (நடன இயக்கம்) < 10% ஆண் கோரியோகிராபர்கள் ஆதிக்கம் அதிகம் Stunt Coordination < 2% ஆண்கள் ஆதிக்கம் மற்றும் ஆபத்தான பணி Music Direction / Background Score < 5% பாடல்களில் பெண்கள் இருப்பினும் இசை அமைப்பில் குறைவான பங்கு
முக்கிய காரணங்கள்:
* பாதுகாப்பு குறைவு. குறிப்பாக இரவு நேரங்களில் பணியாற்ற வேண்டிய சூழல்.
* Gender Stereotypes ‘‘இந்த வேலை பெண்களுக்கல்ல” என்ற மனப்பாங்கு அதிகமாகவே இருக்கிறது.
* நம்பிக்கை / வாய்ப்பு இல்லாத சூழல், உயர்நிலை பதவிகளில் பெண்கள் தேர்வு செய்யப்படமாட்டார்கள் என்கிற மனப்பான்மை.
* Work-Life Balance சவால்கள். குறிப்பாக திருமணத்திற்குப் பிறகு தொடர முடியாமல் நிறுத்தும் நிலை.
தேவைப்படும் மாற்றங்கள்:
* தொழில்நுட்ப பயிற்சி வாய்ப்புகள்
* பெண்களுக்கு பாதுகாப்பான சூழல்
* வேலை நேர நெகிழ்வு
* Mentorship Programs (பெண் தொழில்நுட்ப வல்லுனர்கள்
வழிகாட்டல்)
சினிமா தொழில்நுட்ப துறையில் பெண்களின் எண்ணிக்கையை அதிகரிக்க, பல்வேறு நிலைகளில் திட்டமிடல் மற்றும் செயல்பாடு தேவை. இது தனிநபர் முயற்சியாக அல்லாமல் சமூகத்தின் மொத்த மனப்பான்மையிலும் பயிற்சிப் பட்டறைகளிலும் மாற்றத்தை உண்டாக்க வேண்டிய கட்டாயம் இருக்கிறது. சில முக்கியமான வழிகள் கொடுக்கப்பட்டுள்ளன தொழில்நுட்ப கல்வி மற்றும் பயிற்சி வழங்கல்
* பெண்களுக்கு ஸ்கிரிப்ட் எழுதுதல், எடிட்டிங், ஒளிப்பதிவு, ஒலி வடிவமைப்பு, VFX போன்ற துறைகளில் சிறப்பு பயிற்சிகள் ஏற்பாடு செய்யப்பட வேண்டும்.
* Film Institute-களில் பெண்களுக்கு scholarship மற்றும் quota வழங்கலாம்.
* இடைத்தரகர்களுக்கு மாறாக நேரடி வாய்ப்பு உருவாக்கும் workshops / bootcamps தேவை.
பாதுகாப்பான வேலை சூழ்நிலை.
* பெண்களுக்கு படப் பிடிப்புத் தளங்களில் பாதுகாப்பு மற்றும் தனியுரிமை உத்தரவாதமாக இருக்க வேண்டும்.
* பாலியல் சீண்டல்களைத் தடுக்க Internal Complaints Committee (ICC) நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.
* Late-night shifts-க்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் தேவை.
* குறிப்பாக நிறுவனங்களில் இருப்பது போல் மனிதவள அதிகாரிகள் ஒவ்வொரு படக் குழுவிலும் இருத்தல் வேண்டும்.
பெண்களுக்கான வாய்ப்பு அதிகரிப்பு
* பெண்இயக்குநர்கள், எழுத்தாளர்கள் உருவாக்கும் கதைகளுக்கு தயாரிப்பாளர்களின் ஆதரவு தேவை.
* Diversity policy: ஒவ்வொரு படத்திலும் குறைந்தபட்சம் 30% தொழில்நுட்ப பெண்கள் இருக்க வேண்டும் என்பதுபோல் திட்டமிடல்.
* ஊடகங்களில் “Behind-the-Scenes” பெண்கள் பற்றி அதிகமாக பேசப்பட வேண்டும்.
தொழில்துறை கொள்கை மாற்றம்
* Government/Film Council-கள் மூலம் ‘ சினிமாவில் பெண்கள் கொள்கை’ உருவாக்கப்பட வேண்டும்.
* CSR funds மூலமாக பெண்கள் பயிற்சி திட்டங்களுக்கு நிதி ஒதுக்கலாம்.
* Women-only film fund, contests, production houses-ஐ ஊக்குவிக்கலாம்.
சமூக வலிமை மனநிலை மாற்றம்
* ‘இந்த வேலை பெண்களுக்கு கிடையாது’ என்ற மனப்பான்மையை மாற்றும் விழிப்புணர்வு தேவை.
* குடும்பங்கள், கல்வி நிறுவனங்கள், மற்றும் ஊடகங்கள் என எங்கும் பாலினப் பாகுபாடுகளை குறைக்கும் பயிற்சிகள் தேவை.
ஷாலினி நியூட்டன்
|