2028 ஒலிம்பிக்கில் கிரிக்கெட்?



யெஸ். 2028ம் ஆண்டு நடைபெற உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக் தொடரில் ஆறு கிரிக்கெட் அணிகள் பங்கேற்று கிரிக்கெட் போட்டிகளில் விளையாடும் என்ற தகவல் வெளியாகி உள்ளது. மொத்தம் 90 வீரர்கள் பங்கேற்கலாம். 
அணிக்கு 15 பேர் வீதம் இதில் விளையாட உள்ளனர். இதற்கான ஒப்புதலை சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி அளித்துள்ளது.உலகின் மிகப் பெரிய விளையாட்டு திருவிழாவான ஒலிம்பிக்கில் 128 வருடங்களுக்குப் பிறகு கிரிக்கெட் போட்டி இடம்பெற உள்ளது.

கிரிக்கெட் போட்டிகள் எங்கு நடைபெறும் என்ற விவரம் தெரிவிக்கப்படவில்லை. அதேபோல இதில் பங்கேற்கும் ஆறு அணிகளுக்கான தகுதிச் சுற்று குறித்த அறிவிப்பு எதுவும் இதுவரை வெளியாகவில்லை. கடந்த 1900 ஒலிம்பிக்கில் பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் நாடுகள் மட்டுமே கிரிக்கெட் விளையாடின.

காம்ஸ் பாப்பா