ரூ.468 கோடியில் 2வது திருமணம்!



அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸ் இத்தாலியில் தனது காதலி லாரன் சான்செஸ்ஸை கரம் பிடித்தார். இவர்களின் திருமணம் இத்தாலியின் வெனிஸ் நகரில் ரூ.468 கோடியில் பிரமாண்டமாக நடந்தது.
ஜெஃப் பெசோஸ், உலகில் உள்ள பெரும் பணக்காரர்களின் பட்டியலில் 4வது இடத்தில் உள்ளார். இவரது சொத்து மதிப்பு ரூ.18,000 கோடி. இவரது முதல் மனைவி பெயர் மெக்கன்சி ஸ்காட். இவர் நாவலாசிரியர். 1993ல் திருமணமாகி 2020ல் இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்தனர்.

இதையடுத்து செய்தி வாசிப்பாளரான லாரன் சான்செஸுக்கும், ஜெஃப் பெசோஸுக்கும் பழக்கம் ஏற்பட்டது. லாரன் சான்செஸுக்கு வயது 55. பழக்கம் காதலாகி ‘மிதக்கும் நகரம்’ வெனிஸில் திருமணம் முடிந்திருக்கிறது. அமெரிக்காவில் இந்த ஆண்டில் நடக்கும் திருமணங்களின் சராசரி செலவு 36 ஆயிரம் டாலராக உள்ளது. அதனை ஒப்பிடும்போது ஜெஃப் பெசோஸின் திருமணச் செலவு 1000 மடங்கு அதிகம்!

காம்ஸ் பாப்பா