நாயகன் போஸ்ட்மார்ட்டம்!
‘நாயகன்’ வெளியாகி 40 ஆண்டுகளுக்குப் பிறகு சமீபத்தில் ரீரிலீஸ் ஆனது. இதைப் பார்த்துவிட்டு ‘ஜென் Z’ மற்றும் ‘ஆல்ஃபா’ தலைமுறையினர் செய்திருக்கும் விமர்சனம் இது!
‘நிழல்கள் ரவிட்ட ஒருத்தன் வந்து சொல்றான்... ‘என் பையன் துபாய் வேலைக்கு போப்போறான். நாளைக்கு ஃபிளைட். இன்னைக்கு கார்ல போகும்போது ஒரு குழந்தை மேல வண்டி டச் ஆகி குழந்தை ஸ்பாட் அவுட்டு. நீங்கதான் என் பையன் நாளைக்கு துபாய் போய் அவன் வாழ்க்கை செட்டிலாக உதவி பண்ணணும்’னு கேட்டதும்...இன்னொருத்தன வண்டி ஓட்டுனதா ஒப்புக்க சொல்லி அனுப்புறாரு நிழல்கள் ரவி.  சம்பந்தப்பட்ட ஆள ‘சரி நீங்க போங்க... அவ்வளவுதான் நாங்க பாத்துக்குறோம்’னு அனுப்பிச்சர்றாரு. அந்த குழந்தை வீட்டுக்கு ஆறுதல் சொல்லி எதாவது நிதி கொடுக்கக்கூட சொல்லல. ‘நாங்க இத பாத்துக்குறோம் நீ அதப்பாத்து ஆறுதல் சொல்லுனு’ கூட சொல்லல.குழந்தை செத்தது முக்கியமா... அவன் துபாய் போறது முக்கியமா? நீங்களே சொல்லுங்க. இத செல்வா நாயக்கர்கிட்ட சொல்லி பெருமைப்படுறாரு. லூசா நீங்க?
எஸ்பி ராகவன் வர்றாரு. அவரு பொண்ணுக்கு நடந்தத சொல்றாரு. உடனே நாயக்கரு ஆள் அனுப்பி அவன போட சொல்றாரு. அத நாயக்கர் மக சாரு பாத்துடுது. இதுவரை ஓகே.
வீட்டுக்கு வந்து சாரு சண்டை போடும் போது... ‘யம்மா நடந்தது இதுதான்... எஸ்பி மவள வீணடிச்சிட்டானுக பெரிய இடத்து பயலுவ.
ஆக்ஷன் எடுக்க முடிலனு பஞ்சாயத்து நம்மட்ட வந்துருச்சி’னு சொன்னா மேட்டரே ஓவரு.அத விட்டுட்டு... ‘இவன நிறுத்தச் சொல்லு... அவன நிறுத்தச் சொல்லு’னு கண்டதையும் சொல்லி மகளைக் கடுப்பாக்கி பக்கத்தில நின்ன ஜனகராஜ் என்கிற செல்வாவுக்கு பளார்னு ஒரு அறைய வாங்கிக் கொடுத்து... பதிலுக்கு நாயக்கரு தன் மகளை அடிச்சி... மக கோவிச்சுகிட்டு வீட்டை விட்டே போயிடுது. சம்பவம் பண்ணது நாலு பேரு. அதுல ஒருத்தனதான் நாயக்கரு ஆளுங்க அட்டாக் பண்ணானுங்க. மிச்சம் மூணு பேரையும் அப்படியே விட்டுட்டாங்க.ஆக, அந்த வேலையையும் ஒழுங்கா பாக்கல. என்னத்த ஸ்கெட்ச் போட்டு என்னத்த வேலை பாத்தாங்களோ..!
எல்லாத்தையும் விட பெருங்கொடுமை இதுதான்... அசிஸ்டென்ட் கமிஷனர் வீட்டுக்கு நாயக்கரு போறாரு. பார்த்தா அங்கே அவருதான் இவரு மருமவனாம். அஞ்சாறு வயசுல பேரன் இருக்கறதா காட்றாங்க.
பேரனுக்கு ஆறு வயசு. அவன் பிறக்க ஒரு வருஷம். ஆறும் ஒண்ணும் ஏழு. கூட்டிக் கழிச்சுப் பாத்தா கிட்டத்தட்ட ஏழெட்டு வருசம் ஆவுது.ஏன்யா யோவ்... பெத்த பொண்ணு எட்டு வருசமா என்ன பண்ணுதுனு கூட தெரியாம நீ பம்பாய்ல அப்படி என்னதான்யா பண்ணிட்ருந்த..? பொண்ணு கோச்சுனு போவுதுன்னு விரோதக்காரனுகளுக்கு தெரிஞ்சா விபரீதம் ஆகிரும்னு யோசிச்சுரெண்டு மூணு பேர ‘தூரமா இருந்தே பாத்துக்கங்கடா’னு அனுப்பி வெச்சி அப்பப்ப அப்டேட் கேட்டு தெரிஞ்சி வெச்சிருக்க வேணாமா?
இதுல இவரு பம்பாயவே கன்ட்ரோல் பண்றாராம்! என்னய்யா படம் எடுக்குறாங்க... இதுக்கு ஆஸ்கார் வேற வேணும்னு அடம்புடிச்சிருக்காங்க!
ஜென் Z
|