Brain Storage



சிறையில் இருந்து தப்பிப்பது மெக்ஸிகோ, ஜெர்மனி, பெல்ஜியம் போன்ற சில நாடுகளில் குற்றம் இல்லை. சுதந்திர வேட்கை மனித இயல்பு என்பதால், சிறையில் இருந்து தப்பிப்பதை குற்றமாக கருதும் சட்டம் இல்லை. ஆனால், தப்பிக்கும்போதும் (பொருட் சேதம், வாகனத் திருட்டு போன்றவை ) அதன் பிறகும் செய்யும் குற்றங்கள் தண்டனைக்குரியவை. மீண்டும் பிடிபட்டவுடன், பாக்கி சிறைவாசம் அனுபவிக்க வேண்டும், அதிக கெடுபிடிகள் கொண்ட சிறையில்.

ஒரு சொல்லை முன்னிருந்தும் பின்னிருந்தும் படித்தால் ஒரேபோல இருந்தால் (எ.கா. madam, விகடகவி)  palindrome என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படுகிறது. ஒரு பாடலே அவ்வாறு இருந்தால் ? தமிழில் அதற்கு மாலைமாற்று என்று பெயர். ஒரு யாப்பு வகை. திருஞானசம்பந்தர் எழுதிய ‘மாலைமாற்று திருப்பதிகம்’ சிறந்த உதாரணம்.
அதிலிருந்து உதாரணத்திற்கு இரண்டு வரிகள்: 

யாமாமாநீ யாமாமா யாழீகாமா காணாகா
காணாகாமா காழீயா மாமாயாநீ மாமாயா...

தலைநகரே இல்லாத ஒரு நாடு, Nauru. உலகின் மூன்றாம் மிக சிறிய நாடு. தென் பசிபிக் கடலில் அமைந்துள்ள ஒரு தீவு இது. 21 சதுர மீட்டர் சுற்றளவே கொண்ட நாடு இது. 

அமெரிக்கா என்றாலே நினைவிற்கு வருவது சுதந்திரதேவி சிலை 

( Statue of Liberty ). ஆனால், அந்த சிலை வடிவமைக்கப்பட்டது எகிப்து நாட்டிற்காக. சூயஸ் கால்வாய் முகத்துவாரத்தில் கலங்கரை விளக்கமாக இருப்பதற்காக, ஒரு பெண் தனது கையில் விளக்கு பிடித்திருப்பது போல டிசைன் செய்யப்பட்டது. ஆனால், பட்ஜெட் மிக அதிகமாக இருந்ததால், எகிப்து மன்னர் வேண்டாமென்றவுடன், அது அமெரிக்காவிற்கு ஏற்றார் போல சில மாற்றங்களுடன் கொண்டு செல்லப்பட்டு அங்கு நிறுவப்பட்டது.

ராஜேஷ் சுப்ரமணியன்