காற்று



Kungumam magazine, Kungumam weekly magazine, Tamil Magazine 
Kungumam, Tamil magazine, Tamil weekly magazine, Weekly magazine

              காற்று

வழிதவறிப்
போய்விட்டது காற்று
எப்படியும்
மோப்பம் பிடித்து
வந்துவிடும் தோட்டத்துக்கு;
அதற்குள்
பூமி இருண்டுவிடும்
பூக்கள் உதிர்ந்துவிடும்.
- வசந்தராஜா,
நெய்வேலி.

அழுக்கு

புழுதியில் விளையாடும்
எந்தக் குழந்தையும்
அழுக்காக்கிக் கொள்வதில்லை
மனசை!
- பி.ராஜா, சாலைபுதூர்.

ஈரம்

மழையில் நனைகையில்
அவள் அழகு
துவட்டி எடுக்காத
ஓர் துளியாக
நான் இருக்க வேண்டும்!
- இளங்கீரன், சென்னை-101.

கருணை

திருட்டுப் பூனையெனச்
சொல்லி
மூடி வைத்திருக்கிறாய்
பண்டங்களை;
பசியிலிருக்குமென
திறந்து உணவிடுகிறாய்.
உன் கருணையே காதல்!
- லதாமகன், நாங்குனேரி.

வெள்ளம்

நானும் நதிதான் உன்னால்...
நேற்று வற்றிக் கிடந்தேன்.
இன்று
காதல் வெள்ளம்!
- தாரிணி, சென்னை-42.

பணவீக்கம்

ஆதாமின் ஆப்பிளில்
காதல் இருந்தது
நியூட்டனின் ஆப்பிளில்
விஞ்ஞானம் இருந்தது
பத்து ரூபாய்க்கு
வாங்கமுடியாத ஆப்பிளில்
இருப்பதாகச் சொல்கிறார்கள்
பணவீக்கம்!
- பா.விஜயராமன்,
திட்டச்சேரி.