
ஹாலிவுட் நடிகை எலிசபெத் டெய்லரின் வாசகங்கள் அனைத்தும் மனதைத் ‘தைத்தன’. அழகுப் பதுமையாக மட்டுமே அடையாளப்படுத்தப்பட்ட அவரின் நுட்பமான அறிவு, வியப்பைத் தந்தது!
- பி.கம்பர் ஒப்பிலான், சென்னை47.

போதை ஏற்றும் மது ஷாலினியை ‘தாதா’வாக கற்பனை செய்யவே முடியவில்லையே... இப்படியெல்லாம் அதிர்ச்சி கொடுப்பது நியாயமா?
- பா.வெங்கடகிருஷ்ணகுமார்,கோச்சடை.

அப்பனூத்து கிராமத்தின் ‘சாமி வீடு’ பற்றிப் படித்தேன். அந்த வீட்டுக்குள் மரணமே நேராது என்ற நம்பிக்கையில் நிச்சயம் அமானுஷ்யத்தைத் தாண்டி ஓர் அர்த்தம் இருக்கும்.
- சி.டி.பூங்கோதை, விழுப்புரம்.

‘வட இந்தியாவிலிருந்து வேலை தேடிக் கிளம்பறவங்க சர்வ சாதாரணமா பெட்டி, படுக்கையோடு துப்பாக்கியைத் தூக்கிக்கிட்டு கிளம்புறாங்க’ என்ற பகீர் தகவல், இன்னமும் மனதைக் குடைந்து கொண்டிருக்கிறது.
- பி.வி.ருக்மணி, சென்னை99..

‘விஜயா டீச்சர்’ தொடர்கதை மிக நேர்த்தியாகச் செல்கிறது. முன் அத்தியாயங்களைப் படிக்காத ஒரு சிலரின் ஆதங்கத்தை எப்படித்தான் தெரிந்து கொள்கிறீர்களோ! முன்கதைச் சுருக்கம் போட்டு அசத்தி விட்டீர்கள்.
- எஸ்.குபேரன், சிவகங்கை.

‘சென்னை 28’க்குப் பிறகு பல படங்களில் நடித்திருக்கும் நிதின் சத்யா, ‘சென்னை 28’ டீமுடன் போட்ட அக்ரிமென்ட்டை மீறாதிருப்பது வாவ்! அதற்காக அஜித் படத்தை இழந்திருப்பதும் ஆச்சரியமே. அந்த அக்ரிமென்ட் பலிக்க வாழ்த்துக்கள்!
-எஸ்.டி.ரேவதி ஸ்ரீனிவாசன், கரூர். .

வாரா வாரம் வெளியாகும் ‘வலைப்பேச்சு’ கமென்ட் ஒவ்வொன்றும் நச்! படித்தோம்; ரசித்தோம்; சிரித்தோம்.
- டி.கணபதி ராவ்,புதுச்சேரி.