செல்வராகவனோட ‘இரண்டாம் உலகத்’துல அனுஷ்காவுக்கு ரெட்டை வேடமாம். ஒண்ணுல சாஃப்ட்டான குடும்பப் பெண்ணா வந்துட்டு, இன்னொரு வேஷத்துல ஆக்ஷன்ல அசத்தற பழங்குடிப் பெண்ணா வருதாம் அனுஷ்க். அசத்..!
ஸ்டிரைக்கால மேற்படி பட ஷூட்டிங் தள்ளிப் போகவே, லொகேஷன்கள் பார்க்கிறதுக்கு கண்டம் விட்டு கண்டம் பாஞ்சுக்கிட்டிருக்கார் செல்வா. முதல்ல பிரேசில் போய்ட்டு வந்தவர், இப்ப யுஎஸ்ல இருக்கார்.
‘சட்டம் ஒரு இருட்டறை’யை எஸ்.ஏ.சி ரொம்ப நாளா எடுக்கப் போறதா சொல்லிக்கிட்டிருக்க, இப்ப அதை விஜய் தயாரிக்க இருக்கறதா நியூஸ். ஹீரோவா பிரபு மகன் விக்ரம் பிரபுவையும், ஹீரோயினா கார்த்திகாவையும் நடிக்க வைக்க ஐடியா இருக்காம். நைஸ்..!
ஸ்ரேயாவை எங்கே காணோம்னு யாராவது தேடினா, அவங்களுக்கு ஆஜர் சொல்றதுக்காகவே வருது ‘ராஜா போக்கிரிராஜா’. மலையாள மெகா ஸ்டார் மம்மூட்டியும், பிரித்விராஜும் இணையற படத்துல ஸ்ரேயா இணையறது பிரித்வியோட. ராஜாவுக்கேத்த ராணி..?
மாலிவுட் நடிகர்களோட ஸ்ரேயா வர, பாலிவுட் ஹீரோ ஸ்ரேயாஸ் தல்பேடோட ஜோடி போட்டு நம்ம சதா தமிழுக்கு வருது. ‘கிளிக் 3’ன்னு வர்ற படத்துல ரியா சென்னோட சினேகா உல்லாலும் உள்ளாள். ‘கிளிக் 3’ங்கிறது சரிதானே..?
‘மௌனகுரு’ சாந்தகுமார் சொன்ன கதை ஒண்ணு ஜீவாவுக்குப் பிடிச்சுப் போக, அந்த புராஜெக்ட் சீக்கிரமே மூவ் ஆகப்போகுது. ஜீவா கைல ஸ்டூடியோ கிரீன் அட்வான்ஸ் இருக்க, புது காம்பினேஷன் உருவாகலாம்ங்குது பட்சி..!
தன்னோட ‘முகமூடி’ படத்துக்கான பாடல்களை ரெக்கார்ட் பண்றதுக்காக மியூசிக் டைரக்டர் ‘கே’வோட கைகோர்த்து செக் நாட்டுக்கு போயிருக்கார் டைரக்டர் மிஷ்கின்.
‘அம்புலி 3டி’யை மேலும் 25 தியேட்டர்கள்ல ரிலீஸ் பண்ணக் கேட்டதுல உற்சாகமான புரட்யூசர், அதே புரொடக்ஷன் டீமை வச்சு படத்தோட சீக்வலையும் தயாரிக்கவிருக்காராம். பெரிய ஸ்டார்களை நடிக்க வைக்கவும் யோசனை இருக்காம்.
ஃபோக் பாடல்கள்ல பொளந்து கட்டிக்கிட்டிருந்த வேல்முருகன் இப்ப நடிகராவும் அவதாரம் எடுத்திருக்கார், ‘பழைய வண்ணாரப்பேட்டை’ படத்துல. தானே பாடியிருக்க கானா பாடலுக்கு அவர் போடற ஆட்டம் அதிருமாம்... வெல் முருகன்..!
சைலன்ஸ்அமர்க்களமா வளர்ந்த டைரக்டர் சொந்தப் படமெடுத்து நம்பியவர்களாலேயே நஷ்டப்பட்டும், வசூல் ராஜாக்களால வழக்கு, வாய்தான்னும் போய்க்கிட்டிருந்தார். இப்ப மீண்டும் சொந்தப் படமெடுக்கத் துணிஞ்சு, சண்டக்கோழியா சிலுப்பற ஸ்கிரிப்ட் ரெடி பண்ணி, அந்த உயர ஹீரோகிட்ட ஆறு விரல் சம்பளம் காட்டி டேட்ஸை வாங்கிட்டாராம். ரிஸ்க், ரஸ்க் டயலாக்தான் நினைவுக்கு வருது..!
அடுத்த படமும் அதே ஹீரோவுக்குத்தான்னு நம்பி ‘பாட்டை’யில போய்க்கிட்டிருந்த டைரக்டர்கிட்டேர்ந்து, அந்த ஹீரோவும், அவர் வளர்த்துவிட்ட கபடி ஹீரோவும் கழண்டுக்கிட்ட நிலையில அவர் போக்கிரித்தன புரட்யூசர் வாரிசை ஹீரோவாக்கிப் படமெடுக்க ஆரம்பிச்சிருக்காராம். ஆனா ஹீரோவோட அப்பாவுக்கு பதிலா டைரக்டரோட அப்பாவே படத்தைத் தயாரிக்கப் போறதுதான் பியூட்டி. கபடி... கபடி... காசுக்கு ரெண்டடி..!
-கோலிவுட் கோயிந்து