நல்லா இருக்கும் லைஃப்





‘லவ் பண்ணுங்க... லைஃப் நல்லா இருக்கும்’னு ஒரு புதுமொழி இருக்கு. அதோட உண்மையான அர்த்தம் யாருக்கும் தெரியறது இல்ல. நான் சொல்றேன், கேளுங்க...

*  காதலியோட தியேட்டர் போகும்போது தியேட்டர்காரன் லைஃப் நல்லா இருக்கும்.

*  காதலியோட கோயிலுக்குப் போனா பூக்காரி, பூசாரி, பிச்சைக்காரன் லைஃப் நல்லா இருக்கும்.

*  காதலியோட ஹோட்டல் போகும்போது ஹோட்டல்காரன் லைஃப் நல்லா இருக்கும்.

*  காதலியோட பைக்ல போனா பெட்ரோல் பங்க்காரன் லைஃப் நல்லா இருக்கும்.

*  காதலியோட பீச் போனா சுண்டல் பையன், ஐஸ்கிரீம்காரன் லைஃப் நல்லா இருக்கும்.

ஸோ... இப்படி காதலிய எங்க கூட்டிட்டுப் போனாலும் அவங்க லைஃப்தான் நல்லா இருக்கும். பசங்க லைஃப் இல்ல!
பசங்களே... இந்த செய்தியை எல்லோருக்கும் சொல்லுங்க! உங்க லைஃப் நல்லா இருக்கும்...
- சி.பி.செந்தில்குமார்,
சென்னிமலை.