செல்வராகவனோட ‘இரண்டாம் உலகத்’துக்கான முக்கிய காட்சிகள்ல நடிக்க ஆர்யாவும், அனுஷ்காவும் ஜார்ஜியா போயிருக்காங்க. அங்கே இரண்டாவது வேடத்துல பழங்குடிகளா வர்றாங்களாம் ரெண்டு பேரும்.
வழக்கமா கமல் படங்களோட தெலுங்கு வெர்ஷன் டப்பிங்குகளை பாடகர் எஸ்.பி.பி பேசுவார். ஆனா ‘விஸ்வரூபம்’ விஷயத்துல விசேஷ கவனம் எடுத்து கமலே தன் சொந்தக் குரல்ல பேசியிருக்காராம். பெர்ஃபெக்ஷனிஸ்ட்..!
தன் டைரக்ஷன்ல விக்ரம் நடிக்கப் போற ‘ஐ’ படத்துக்கான லொகேஷன்களை முடிவு பண்றதுக்காக சீனா கிளம்பவிருக்காராம் ஷங்கர். அடுத்து சீனாவுக்குப் போறாரா ச்சீயான்..?
அதே சீயான் மலையாளத்துல நடிக்கிற படம் ‘டேவிட்’. ஆனா படத்துல இவர் மட்டுமே டேவிட் இல்லை. இன்னுமொரு டேவிட்டும் இருக்கார். அது நம்ம ஜீவாதான். கேரக்டரைசேஷன், ‘ஸேம் ஓல்டு டேவிட்’டா இல்லைன்னா சரி..!
சமீபத்திய ரிலீஸ் ‘தடையறத் தாக்க’ தந்த நல்ல பேரோட, மம்தா மோகன்தாஸுக்கு இப்ப கன்னடத்திலேர்ந்து வர்ற ‘கொருக்குப்பேட்டை கூலி’ மூலம் அடுத்த தமிழ்ப்படம் ரெடியாகியிருக்கு. கல்யாண ராசி..?
‘காவல் கோட்டம்’ நாவலோட ஒரு பகுதியான ‘அரவான்’ல சினிமா கதாசிரியராவும் அறியப்பட்ட சாகித்ய அகாடமி வின்னர் சு.வெங்கடேசன், யுவராஜ் அழகப்பன் டைரக்ட் பண்ற ‘கலியுகம்’ திரைக்கதைலயும் முக்கியப் பங்கெடுத்திருக்கார். சு.விக்கு சினிமா வசப்படுமா..?
‘போக்கிரி’ல தன்கிட்ட வேலை பார்த்த சந்திரசேகர்ங்கிற அசிஸ்டன்ட் டைரக்டர் இறந்துட்டதைக் கேள்விப்பட்ட பிரபுதேவா, அவர் குடும்பத்துக்கு ஒரு லட்ச ரூபாய் உதவி
யிருக்கார். ‘பணமிருக்கும் மனிதரிடம் மனமிருப்பதில்லை’ன்னு யார் சொன்னா..?
பாடலாசிரியர் அண்ணாமலை சமீபத்துல பிறந்த தன் பெண் குழந்தைக்கு ‘மௌனா’ன்னு பேர் வச்சிருக்கார். அர்த்தம் கேட்டா, குழந்தையோட அமைதியான சுபாவத்தைக் காரணமா சொல்றார். பிறந்த குழந்தை கவிதை பாடுமா கவிஞரே..?
‘முதல் தகவல் அறிக்கை’ன்ற படத்தைத் தயாரிக்கிற முஜீப், அதே படத்துல நடிக்கவும் செய்யறது புது விஷயமில்லை. ஆனா அவர் அசப்பில நடிகர் கிஷோர் போலவே இருக்கிறது ஆச்சரியமான விஷயம். கிஷோர் மாதிரியே நல்லா நடிச்சா ஓகே!
- கோலிவுட் கோயிந்து
சைலன்ஸ்
பிக் ‘எம்’ டைரக்டரோட படத்திலேர்ந்து ‘ஈ’ நடிகை விலகிய காரணமா என்னென்னவோ சொல்றாங்க. ஆனா உண்மையான காரணம், தன்னோட டோலிவுட் சித்தாந்தப்படியே பங்க்சுவாலிட்டின்னா என்ன விலைன்னு கேக்கற பொண்ணு, தன் டைமுக்கு ஷூட்டிங் வந்துக்கிட்டிருந்ததாம். பொறுமை எல்லை மீறிய ‘எம்’, கணக்கை செட்டில் பண்ணிட்டாராம். ‘சமத்தா’ பேரெடுக்கணும் மோளே..!
மேனன் ரெண்டு படம் முடிக்க வேண்டியிருக்க, சிங்க நடிகருக்கும் ரெண்டு அசைன்மென்ட் இருக்க, அதுக்குள்ள அதுக்கடுத்த படத்தை அறிவிக்க வேண்டிய அவசரம் என்ன? ‘அவசரம் ஒண்ணுமில்ல, அவசியம்தான்’னு விவரம் தெரிஞ்சவங்க சொல்றாங்க. படத்தைப் புரட்யூஸ் பண்றது படா கம்பெனியானதால இப்போதைக்கு கமிட் பண்ணி அட்வான்ஸ் வாங்கிடறதுதான் நோக்கமாம். பல கோடிகளுக்கு
ஒரு வருஷ வட்டி என்னாச்சு..?
காத்துள்ளபோதே...