தத்துவம் மச்சி தத்துவம்





‘‘இன்ஸ்பெக்டர் கூகுள்ல என்ன
தேடறார்..?’’
‘‘நமக்கு மாமூல் கொடுத்தது போக மீதி பணத்தை கபாலி எங்கே பதுக்கி வச்சிருக்கான்னுதான்..!’’
- பர்வீன் யூனுஸ், சென்னை-44.

‘‘என்னய்யா இது... சாதா கோச்சுக்கு டிக்கெட் வாங்கிட்டு ஏசி கோச்சுல ஏறி இருக்கே..?’’
‘‘வேணும்னா ஏசியை ஆஃப் பண்ணிடுங்க சார்..!’’
- வி.சாரதி டேச்சு, சென்னை-5.

‘‘தலைவர் எப்பவும் சரக்கு ஞாபகத்துலயே இருக்காருன்னு எப்படிச் சொல்ற..?’’
‘‘பாசனத்துக்காக அணையிலிருந்து தண்ணீரைத் திறந்து விட்டுட்டு, அது பொங்கி வர்றதைப் பார்த்ததும் ‘சியர்ஸ்’னு
கத்திட்டாரே..!’’
- ஜி.சாயிலெட்சுமி,
கிருஷ்ணாபுரம்.

என்னதான் சிகரெட் வெள்ளை கலர்ல இருந்தாலும், அதை சிக‘ரெட்’னுதான் சொல்ல முடியும்; சிக‘வொயிட்’னு சொல்ல முடியாது.
- தம¢ அடித்துக்கொண்டே
தத்துவம் சொல்வோர் சங்கம்
- அ.பேச்சியப்பன், ராஜபாளையம்.

கண் டாக்டர் ‘பார்வை நேரம்’னு போர்டு போடலாம்... அதுக்காக காது டாக்டர் ‘கேட்கும் நேரம்’னு போர்டு போட முடியுமா..?
- காதுவலியோடு தத்துவங்களை காதுகொடுத்துக் கேட்போர் சங்கம்
- ஜே.தனலட்சுமி, கோவை.

பணக்கட்டுக்கு ரப்பர் பேண்ட் போடலாம்; பவர்கட்டுக்கு ரப்பர் பேண்ட் மட்டுமில்லை... சாதா பேண்ட் கூட போட முடியாது!
- வெயிலுக்கு இதமாக வேட்டி மட்டும் கட்டுவோர் சங்கம்.
- பெ.பாண்டியன், காரைக்குடி.


‘’ஏன் கபாலி!
திருடுற வீடுகள்ல ஆட்களை எழுப்பி ரொம்ப திட்டறியாமே..?’’

‘‘தங்கம் இந்த விலை விற்கும்போது வீட்ல இவ்வளவு ஸ்டாக் வைக்கணுமான்னு சத்தம் போடுறது தப்பா ஏட்டய்யா?’’